Back to homepage

Tag "அமெரிக்கா"

நிலவில் கொடி நாட்டிய சீனா: அமெரிக்காவுக்கு அடுத்து சாதனை

நிலவில் கொடி நாட்டிய சீனா: அமெரிக்காவுக்கு அடுத்து சாதனை 0

🕔5.Dec 2020

நிலவில் தனது தேசியக் கொடியை முதன் முதலில் அமெரிக்கா நட்டு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா தனது தேசியக் கொடியை நிலவில் நட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட சீனாவின் செங்கொடி காணப்படும் படத்தை – சீன தேசிய விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த படங்கள், கடந்த வியாழக்கிழமை நிலவின் பாறை மாதிரிகளுடன்,

மேலும்...
உலகளவில் கொரோனா மரணம் 15 லட்சத்தை தாண்டியது: முதலிடத்தில் அமெரிக்கா

உலகளவில் கொரோனா மரணம் 15 லட்சத்தை தாண்டியது: முதலிடத்தில் அமெரிக்கா 0

🕔4.Dec 2020

உலகளவில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரையில் 06 கோடியே 56 லட்சத்து 298 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மேற்படி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் 04 கோடி 54 லட்சத்து 31 ஆயிரத்து 944 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனாவினால் 15 லட்சத்து 14,827 பேர்

மேலும்...
டொனால்ட் ட்ரம்ப்; வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா: ஊடவியலாளர்களிடம் அவர் சொன்னது என்ன?

டொனால்ட் ட்ரம்ப்; வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா: ஊடவியலாளர்களிடம் அவர் சொன்னது என்ன? 0

🕔27.Nov 2020

தேர்தல் சபை வாக்குகளை பைடன் பெற்றிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியாகவுள்ள நிலையிலேயே, ட்ரம்ப்

மேலும்...
தேர்தல் தோல்வியை ஒத்துக் கொள்வதில் ட்ரம்ப் குடும்பத்துக்குள் விரிசல்: எதிர் கருத்தில் மனைவி மெலானியா

தேர்தல் தோல்வியை ஒத்துக் கொள்வதில் ட்ரம்ப் குடும்பத்துக்குள் விரிசல்: எதிர் கருத்தில் மனைவி மெலானியா 0

🕔9.Nov 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தமையை ஒப்புக் கொள்வது தொடர்பாக,அவரது நெருங்கிய வட்டத்துக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி ஊடகமான சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. ட்ரம்பின் மருமகனும் அவரது மூத்த ஆலோசகருமான ஜேரட் குஷ்னர் மற்றும் டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் அமெரிக்காவின் முதல் சீமாட்டியுமான மெலானியா ட்ரம்ப் ஆகியோர் – தமது தேர்தல் தோல்வியை

மேலும்...
ஐந்து முறை காதலைச் சொன்ன பிறகுதான் ஜோ பைடனை ஏற்றுக் கொண்டேன்:  இளமைக்கால நினைவுகளைப் பகிரும் ஜில் பைடன்

ஐந்து முறை காதலைச் சொன்ன பிறகுதான் ஜோ பைடனை ஏற்றுக் கொண்டேன்: இளமைக்கால நினைவுகளைப் பகிரும் ஜில் பைடன் 0

🕔8.Nov 2020

அமெரிக்காவில் ஜனாதிபதியின் மனைவியை ‘முதல் சீமாட்டி’ என்பார்கள். இதுவரை பெண்கள் யாரும் ஜனாதிபதி ஆகவில்லை என்பதால், பெண்ஜனதிபதியின் கணவரை எப்படி அழைப்பார்கள் என்பது தெரியாது. இப்போது ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 20 முதல் அமெரிக்காவின் முதல் சீமாட்டியாகிறார் அவரது மனைவி, ஜில் பைடன். ஆங்கில ஆசிரியையாக

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பைடன் வெற்றி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பைடன் வெற்றி 0

🕔7.Nov 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபையின் 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 273 தேர்தல் சபை வாக்குகள் கிடைத்துள்ளன. இதேவேளை டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குளையே பெற்றுள்ளார். எனவே, அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ளார். இது இவ்வாறிருக்க ‘அமெரிக்க ஜனாதிபதி

மேலும்...
இரண்டாவது பதவிக்கால தேர்தலில் தோற்றுப் போன, அமெரிக்க ஜனாதிபதிகள்: உங்களுக்கு எத்தனை பேரை தெரியும்?

இரண்டாவது பதவிக்கால தேர்தலில் தோற்றுப் போன, அமெரிக்க ஜனாதிபதிகள்: உங்களுக்கு எத்தனை பேரை தெரியும்? 0

🕔7.Nov 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவு இழுபறியில் இருந்து வருகின்றது. இருந்த போதும் ஜோ பைடன் வெற்றிக்கு மிக அருகாமையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறெனில், அமெரிக்காவில் இரண்டாவது முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜனாதிபதிகள் பட்டியலில் டொனாட் ட்ரம்ப், 11ஆவது ஆளாக சேர்ந்து கொள்வார். அமெரிக்காவில் ஜனாதிபதி அலுவலகம் 1789-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. அந்நாட்டின் 231

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை; வெற்றி யாருக்கு: புதிய கருத்து கணிப்பு முடிவு வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை; வெற்றி யாருக்கு: புதிய கருத்து கணிப்பு முடிவு வெளியானது 0

🕔2.Nov 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை 03ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விடவும், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக புதிய கருத்து கணிப்பு மூலம் தெரிய வருகிறது. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு நேற்று வெளியானது. என்.பி.சி நியூஸ் மற்றும்

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; கட்டுப்பாடின்றி இறைக்கப்படும் பணம்: மொத்த செலவு பற்றி அறிவீர்களா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; கட்டுப்பாடின்றி இறைக்கப்படும் பணம்: மொத்த செலவு பற்றி அறிவீர்களா? 0

🕔29.Oct 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான செலவு பற்றி நீங்கள் அறிவீர்காள? அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதற்கான பிரசார செலவு மட்டும், ஆறரை பில்லியன் டொலர்கள் ஆனது. இலங்கைப் பெறுமதியில் 01 கோடியே 19 லட்சத்து 59 ஆயிரத்து 600 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையாகும். இந்த ஆண்டு

மேலும்...
அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கை வந்தடைந்தார்; சீனாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதே நோக்கம் என்கிறார் தமரா

அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கை வந்தடைந்தார்; சீனாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதே நோக்கம் என்கிறார் தமரா 0

🕔27.Oct 2020

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை இலங்கை வந்துள்ளார். ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை ஆரம்பித்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டீ எஸ்பர் ஆகியோர் நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்த நிலையில் சீனாவுக்கு

மேலும்...
இலங்கையில்  பல அரசாங்கங்களை வெளிநாட்டுத் தூதரகங்களே தெரிவு செய்தன: அனுர குமார திஸாநாயக்க

இலங்கையில் பல அரசாங்கங்களை வெளிநாட்டுத் தூதரகங்களே தெரிவு செய்தன: அனுர குமார திஸாநாயக்க 0

🕔4.Jul 2020

இலங்கையில் பல அரசாங்கங்களை ஆட்சியில் அமர்த்தியது நாட்டு மக்கள் அல்ல எனவும் வெளிநாட்டுத் தூதரகங்களே அரசாங்கங்களை ஆட்சியில் அமர்த்தியதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தெஹிவளை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும்தெரிவிக்கையில்; “இலங்கையில் தலைவர்களை

மேலும்...
அமெரிக்காவில் 02 கோடி பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: அதிர்ச்சித் தகவல்

அமெரிக்காவில் 02 கோடி பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: அதிர்ச்சித் தகவல் 0

🕔26.Jun 2020

அமெரிக்காவில் குறைந்தது இரண்டு கோடி மக்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் தற்போது கொவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 24 லட்சத்தை விட உண்மையான பாதிப்பு பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று அந்த நாட்டின் நோய்க்கட்டுப்பாட்டு

மேலும்...
கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0

🕔11.Jun 2020

“இலங்கை இன்னும் ஐந்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் மாநிலமாக மாறிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை மக்களை விடவும் அமெரிக்காவை நேசிக்கிறார். அவர்களுக்கு விசுவாசமாக செயற்படுகின்றார்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.  அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதையையே நோக்காகக்கொண்டு கோட்டாபய செயற்படுகின்றார்

மேலும்...
எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய் என உறுதியானது; கோட்டாவின் பிரஜாவுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய் என உறுதியானது; கோட்டாவின் பிரஜாவுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு 0

🕔9.May 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரின் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கியுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது. பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டோர் தொடர்பான இந்த காலாண்டுக்கான பெயர்ப் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையல்லவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதும், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்ட போது,

மேலும்...
அமெரிக்காவில் குடியேறுவதற்கான ‘கிறீன் காட்’ முறைக்கு தடை: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் குடியேறுவதற்கான ‘கிறீன் காட்’ முறைக்கு தடை: ட்ரம்ப் அறிவிப்பு 0

🕔22.Apr 2020

அமெரிக்காவில் குடியேறுவதற்கான ‘கிரீன்காட்’ முறை 60 நாட்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தொழில்களை இழந்த அமெரிக்கர்களை பாதுகாக்கும் வகையில், இந்த குடிவரவு கட்டுப்பாடு அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பை விடவும், இனிவரும் அடுத்தகட்ட வைரஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்