அமெரிக்காவில் குடியேறுவதற்கான ‘கிறீன் காட்’ முறைக்கு தடை: ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் குடியேறுவதற்கான ‘கிரீன்காட்’ முறை 60 நாட்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தொழில்களை இழந்த அமெரிக்கர்களை பாதுகாக்கும் வகையில், இந்த குடிவரவு கட்டுப்பாடு அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பை விடவும், இனிவரும் அடுத்தகட்ட வைரஸ் பரவல் இதைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு மையம் தெரிவித்துள்ளது.
“அடுத்த குளிர்காலத்தில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம், தற்போது நாம் சந்திப்பைத விட மிகவும் மோசமாக இருக்கும்” என்று அந்த மையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்பீல்ட் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று பரவலும் ஒரே நேரத்தில் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.