
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் விசாரணைகள் இன்று (21) முதல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்து.
இதனை, பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய அகழ்வின் போது, மேலும் 07 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
ஏற்கனவே இந்த பகுதியிலிருந்து 65 எலும்புக்கூட்டுத் தொகுதிகள், இதுவரை மீட்கப்பட்டுள்ளன.



