தலைப்புச் செய்திகள்

வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கல்ஹின்னை அஸீஸ் கலாநிதிப் பட்டம் பெற்றார்

– எம்.எஸ்.எம். ஸாகிர் –

அமெரிக்காவிலுள்ள வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து கல்ஹின்னையைச் சேர்ந்த எஸ்.ஏ. அஸீஸ் கலாநிதிப் பட்டம் (Doctorate in commercial law) பெற்றுள்ளார்.

வரி மற்றும் வர்த்தக நிதி சட்டங்களில் இவர் விசேட தேர்ச்சிகளைப் பெற்றுள்ளதோடு, இவை சம்பந்தமாக பல ஆய்வுகளையும் செய்துள்ளார். இவரின் ஆக்கங்கள் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

இஸ்லாமிய நிதி தொடர்பான இவரின் ஆய்வுகள் இலங்கையின் முன்னணி ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

நல்லாட்சி அரசாங்க காலத்தில், அஸீஸ் – பட்டயக் கணக்கறிஞர் நிர்வாக ஆளுநர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் கணக்காய்வு வரி மற்றும் முகாமைத்துவ ஆலோசனை நிறுவனத்தை நடத்திவரும் இவர், இஸ்லாமிய நிதி ஆலோசகராகவும் செயற்படுகின்றார்.