லொஹான் நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ‘அந்த’ அமைச்சிலிருந்து விலகி இருக்க வேண்டும்: விமல் கூறும் நியாயம்

🕔 September 17, 2021

லொஹான் ரத்வத்த நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து – அவர் விலக வேண்டியிருந்திருக்கும் என்று, அமைச்சர் விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம சிறைச்சாலைகளில் நடைபெற்ற முறைகேடான சம்பவங்களை அடுத்து, லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் நிர்வாக அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ள போதும், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான தொழில்கள் ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகவில்லை என்பதை சுட்டிக்காட்டி, ஊடகவியலாளர் ஒருவர் நேற்று (16) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே விமல் வீரசன்ச மேற்கண்டவாறு பதிலளித்தார்.

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்று லோஹான் ரத்வத்த ராஜினாமா செய்துள்ளதாக, இதன்போது அமைச்சர் வீரவன்ச குறிப்பிட்டார்.

“இது சம்பவங்கள் போன்ற தவறுகள் நடக்கின்றன. ஆனால் ரத்வத்த மனதார ராஜினாமா செய்தார் என்பது மக்களால் மதிக்கப்பட வேண்டும்” என்றும் என்றும் அவர் கூறினார்.

ராஜினாமா தொடர்பான முன்மாதிரியான நடத்தை கடந்த காலங்களில் காணப்படவில்லை என்றும் அமைச்சர் வீரசன்ச இதன்போது மேலும் தெரிவித்தார்..

Comments

புதிது பேஸ்புக் பக்கம்