றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனாருக்கு பிணை

🕔 September 17, 2021

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த றிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் (மனைவியின் தந்தை) ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும், இந்த வழக்கில் றிசாட் பதியுதீனை ஒக்டோபர் 01ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிஷாலினி மரணம் தொடர்பில் றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை வேலைக்கு அமர்த்துவதற்கு உதவிய தகரகர் ஆகியோர் ஜுலை 24ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

அதிலிருந்து தொடர்ச்சியாக றிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீனின் மைத்துனரும் தரகரும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்