Back to homepage

தென் மாகாணம்

பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவிக்கு விளக்க மறியல்; தங்க நகை மோசடி குற்றச்சாட்டு

பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவிக்கு விளக்க மறியல்; தங்க நகை மோசடி குற்றச்சாட்டு

பிரபல சிங்களப் பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவி – ஹாசினி அமேந்திராவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு, தங்கல்ல நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. தங்கல்ல பொலிஸ் நிலையத்துக்கு வாக்கு மூலமொன்றினை வழங்வதற்காக, தனது சட்டத்தரணியுடன் வருகை தந்தபோது, இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். அரச வங்கியொன்றில் விக்டர்

மேலும்...
எதிர்க்கட்சியினர் மீது மட்டும்தான், தேர்தல் சட்டம் பாய்கிறது: நாமல் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சியினர் மீது மட்டும்தான், தேர்தல் சட்டம் பாய்கிறது: நாமல் குற்றச்சாட்டு

அரசாங்கத்துக்கு எதிரான கட்சிக்காரர்கள் மீது மட்டும்தான், பொலிஸாரும் தேர்தல்கள் ஆணைக்குழுவினரும் தேர்தல் சட்டத்தைப் பிரயோகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். தங்கல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசாங்க பிரதிநிதிகள் வெளிப்படையாக தேர்தல் சட்டங்களை மீதுவதாகவும், அதன் போது சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவர்களின் கண்கள் குருடாகிப்போய்

மேலும்...
சுற்றுலா வந்திருந்த ஜேர்மன் பெண், கடலில் மூழ்கி மரணம்

சுற்றுலா வந்திருந்த ஜேர்மன் பெண், கடலில் மூழ்கி மரணம்

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 59 வயதுடைய ஜேர்மன் நாட்டு பெண் ஒருவர், மரகொல்லியா – தங்கல்ல பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண், கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். சம்பநம் நிகழ்ந்த கடற்பகுதி ஆபத்தானது என, கரையோரைப் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்திருந்தும், அந்த இடத்தில் குறித்த

மேலும்...
வெலிகம பிரதேச சபைக்கான மு.கா.வின் வேட்புமனு நிராகரிப்பு; நீள்கிறது பட்டியல்

வெலிகம பிரதேச சபைக்கான மு.கா.வின் வேட்புமனு நிராகரிப்பு; நீள்கிறது பட்டியல்

வெலிகம பிரதேச சபையில் போட்டியிடும் பொருட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. குறித்த வேட்புமனுவில் 25 வீதமான பெண் பிரதிநிதித்துவம் இல்லாமை காரணமாகவே, அது – நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் பெற்ற முகவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்காமை காரணமாகவும்,

மேலும்...
தேர்தல் சட்டத்தை மீறி,03 ஆயிரம் தொழிலை அரசாங்கம் வழங்கவுள்ளது: நாமல் குற்றச்சாட்டு

தேர்தல் சட்டத்தை மீறி,03 ஆயிரம் தொழிலை அரசாங்கம் வழங்கவுள்ளது: நாமல் குற்றச்சாட்டு

தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் கொழும்புதுறைமுகத்தினுள் 3000 தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்காக, அரசாங்கம் நேர்முகப்பரீட்சைகளை நடத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணியாற்றிய 438 பேரை பனி நீக்கம் செய்வதற்கு துறைமுக அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதையும்

மேலும்...
அரச வங்கியில் 50 லட்சம் கொள்ளை; துப்பாக்கி சூடு நடந்ததால் வாடிக்கையாளர் காயம்

அரச வங்கியில் 50 லட்சம் கொள்ளை; துப்பாக்கி சூடு நடந்ததால் வாடிக்கையாளர் காயம்

அரச வங்கியொன்றில் கொள்ளையிட்டவர்களில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த, வங்கி வாடிக்கையாளரொருவர் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை 9.45 மணியளவில் இடம்பெற்றது. தங்கல்ல – குடாவெல்ல பகுதியிலுள்ள குறித்த வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கியை காட்டி மிரட்டி, அங்கிருந்து 50 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச்

மேலும்...
புத்தகப் பையில் கைஞ்சா வைத்திருந்த மாணவன் நீதிமன்றில் ஆஜர்

புத்தகப் பையில் கைஞ்சா வைத்திருந்த மாணவன் நீதிமன்றில் ஆஜர்

தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் புத்தகப் பையிலிருந்து சிறியளவான கஞ்சா பொதியொன்று கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து, குறித்த மாணவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சம்பவம் தெஹியந்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தெஹியந்தர – முலதியான பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களுடைய புத்தகப் பையினை பொலிஸார் சோதனை செய்தபோதே, அவர்களில் ஒருவரினுடைய பையிலிருந்து 270 மில்லி கிராம்

மேலும்...
சுதந்திரக் கட்சியினருடனான பேச்சுக்களின் போது, பதவிகள் எதையும் கோரப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ

சுதந்திரக் கட்சியினருடனான பேச்சுக்களின் போது, பதவிகள் எதையும் கோரப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ

சுதந்திரக் கட்சிக்கும் கூட்டு எதிரணியினருக்கும் இடையிலான சந்திப்பின் போது, அரசாங்கத்திலுள்ள பதவிகள் எவற்றினையும் தாம் கோரப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அஹுங்கலயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார். பிரதமர் பதவியும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் – ஒன்றிணைந்த எதிரணியினருக்கு

மேலும்...
முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; காலியில் சம்பவம்

முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; காலியில் சம்பவம்

காலி நகருக்கு அண்மையில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடொன்றின் மீது, இன்று செவ்வாய்கிழமை அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள வீடொன்றின் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் காலி – கிந்தொட்ட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு

மேலும்...
ஜின்தோட்டயில் இன்று காலை வரை ஊரடங்குச் சட்டம்; நிலமை கட்டுப்பாட்டுக்குள்

ஜின்தோட்டயில் இன்று காலை வரை ஊரடங்குச் சட்டம்; நிலமை கட்டுப்பாட்டுக்குள்

காலி – ஜின்தோட்ட பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து அங்கு நேற்றிரவு முதல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வன்முறைகளுடன் தொடர்புடைய 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அங்கு நூற்றுக் கணக்கில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு கடமையிலிருந்த அதிரடிப்படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டமையினைத்

மேலும்...