ஏரிஎம் இயந்திரங்களில் 11 மில்லியன் ரூபா கொள்ளை: வெளிநாட்டவர் சம்பந்தப்பட்டுள்ளனர் என சந்தேகம்

தென் மாகாணத்திலுள்ள மூன்று முக்கிய நகரங்களிலுள்ள ஏரிஎம் இயந்திரங்களில் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கராப்பிட்டிய, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளிலுள்ள பல வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களை ஒரு குழுவினர் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் குழுவினரால் கிட்டத்தட்ட 11 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
4.6 மில்லியன் ரூபா, 275,000 ரூபா மற்றும் 5.7 மில்லியன் ரூபா என, மூன்று தனித்தனி ஏரிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஏடிஎம் மென்பொருளை ‘ஹேக்’ செய்து இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.