நேற்றுச் சுட்டவர், இன்று கொல்லப்பட்டார்: அஹூன்கல்ல சம்பவத்துக்கு பதிலடி

🕔 October 13, 2022

காலி – அஹூன்கல்ல பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு காயப்படுத்தியவர் இன்று (13) மாலை சுட்டுக்கொல்லப்பட்டார்.

குறித்த துப்பாக்கிதாரியை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ய முற்பட்டபோது, அவர்கள் மீது சந்தேக நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்தாகவும், அதன்போதே குறித்த துப்பாக்கித்தாரி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஹுங்கல்ல பகுதியில் – முச்சக்கர வண்டி சாரதியின் மீது நேற்று காரில் வந்த ஒருவர் ரி56 ரக துப்பாக்கியினால் சுட்டு விட்டு – தப்பிச் சென்றிருந்தார்.

அஹுங்கல்லயில் உள்ள கல் வெஹெர பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய நபர் ஒருவர், நேற்றைய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்