
உண்டியல் பணப்பரிமாற்றத்தின் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 27 வயதான கல்பொக்க – வெலிகம பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வெளிநாட்டு நாணயங்களை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது அமெரிக்க டொலர் 18,208, யுரோ 20,035, ஸ்டேலிங் பவுன் 645, ஜப்பான் யென் 100,000, கட்டார் றியால் 1,000, ஐக்கிய அரபு திர்ஹம் 18,500 மற்றும் பிற வெளிநாட்டு நாணயங்கள் சந்தேக நபரிடம் சிக்கின.



