Back to homepage

Tag "மு.காங்கிரஸ்"

சாய்ந்தமருதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின், அதற்கான முழுப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டும்: மக்கள் தெரிவிப்பு

சாய்ந்தமருதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின், அதற்கான முழுப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டும்: மக்கள் தெரிவிப்பு 0

🕔3.Feb 2018

– சாய்ந்தமருதிலிருந்து மப்றூக் – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிமை சாய்ந்தமருதுக்கு வருகை தரும்போது, ஏதாவது பிரச்சினைகளோ அதன் மூலம் இழப்புக்களோ ஏற்படுமாயின் அதற்குரிய ஒட்டு மொத்தப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டுமென, சாய்ந்தமருது மக்கள் தெரிவிக்கின்றனர். சாய்ந்தமருதுக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் இன்று சனிக்கிழமை வருகை தரவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்

மேலும்...
ஹக்கீமின் வருகைக்கு எதிராக, சாய்ந்தமருதில் கடையடைப்பு

ஹக்கீமின் வருகைக்கு எதிராக, சாய்ந்தமருதில் கடையடைப்பு 0

🕔3.Feb 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – சாய்ந்தமருது பிரதேசத்துக்கு வருகை தருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பிரதேசம் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளன. கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் சாய்ந்தமருது வேட்பாளர்களை ஆதரித்து நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ள பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, இன்று சனிக்கிமை சாய்ந்தமருதுக்கு மு.கா.

மேலும்...
மு.கா. தொன்டர்களை சாய்ந்தமருதில் பலிக்கடாக்களாக்கும் ஹக்கீமின் தந்திரம்; சுயநலத் தலைவனை அறிவதற்கான தருணம்

மு.கா. தொன்டர்களை சாய்ந்தமருதில் பலிக்கடாக்களாக்கும் ஹக்கீமின் தந்திரம்; சுயநலத் தலைவனை அறிவதற்கான தருணம் 0

🕔2.Feb 2018

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் – சாய்ந்தமருதில் மு.காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று ‘எழுச்சி மாநாடு’ எனும் பெயரில் நாளை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த கூட்டமானது சாய்ந்தமருது மக்களை வேண்டு மென்றே வம்புக்கு இழுக்கும் செயற்பாடாகும்.அமைச்சர் ஹக்கீமை சாய்ந்தமருதினுள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று, சாய்ந்தமருது மக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரியவருகிறது. சாய்ந்தமருதுக்கு அமைச்சர் ஹக்கீம்

மேலும்...
இழந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக, உள்ளுர் மக்களை மரக் கட்சிக்காரர்கள் மோத விடுகின்றனர்; பலியாகக் கூடாது என்கிறார் அமைச்சர் றிசாட்

இழந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக, உள்ளுர் மக்களை மரக் கட்சிக்காரர்கள் மோத விடுகின்றனர்; பலியாகக் கூடாது என்கிறார் அமைச்சர் றிசாட் 0

🕔2.Feb 2018

  புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் அகதி முஸ்லிம்களையும், உள்ளூர் மக்களையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைச் சுவீகரித்து இழந்த செல்வாக்கையும், அரசியல் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, சதி வேலைகளில் மரக்கட்சிக்காரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விரண்டு சாராரும் இதற்குப் பலியாகிவிடக் கூடாது என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.   புத்தளத்தில், ஹுசைனியாபுரம் (உளுக்காப்பள்ளம்), ஹிதாயத் நகர் (கரிக்கட்டை),

மேலும்...
தொழில் வழங்குவதற்கு, முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா; அன்சில் கேள்வி

தொழில் வழங்குவதற்கு, முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா; அன்சில் கேள்வி 0

🕔1.Feb 2018

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக அதிகாரம் பெற்றவர்கள், அரச தொழில் வழங்குவதற்காக, பொதுமக்களினடம் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் தலைமை வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் கேள்வியெழுப்பினார். பாலமுனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக்

மேலும்...
வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல; லஞ்சமாகவே தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது: அன்சில் குற்றச்சாட்டு

வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல; லஞ்சமாகவே தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது: அன்சில் குற்றச்சாட்டு 0

🕔31.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க தீர்மானித்துள்ளமையானது, அவர் கடந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல என்றும், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, தேசியப்பட்டிலை அவர் லஞ்சமாக வழங்க முன்வந்துள்ளார் எனவும்,

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டில் கொடுக்க வேண்டிய நிலையை, ஹக்கீமுக்கு ஏற்படுத்தியுள்ளோம்: சட்டத்தரணி அன்சில்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டில் கொடுக்க வேண்டிய நிலையை, ஹக்கீமுக்கு ஏற்படுத்தியுள்ளோம்: சட்டத்தரணி அன்சில் 0

🕔28.Jan 2018

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்தால்தான், அட்டாளைச்சேனை பிரதேச சபையினை வென்றெடுக்க முடியும் என்கிற சூழ்நிலையை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு, தாங்கள் ஏற்படுத்தி விட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் தலைமை

மேலும்...
அட்டாளைச்சேனையும் தேசியப்பட்டியலும்; கசப்பை மறந்து, நடிக்கும் தருணம்

அட்டாளைச்சேனையும் தேசியப்பட்டியலும்; கசப்பை மறந்து, நடிக்கும் தருணம் 0

🕔26.Jan 2018

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அட்டாளைச்சேனைக்கு வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் சுமார் 15 வருடங்கள் தேசியப்பட்டியலின் பெயரைச்  சொல்லி, அட்டாளைச்சேனையை ஹக்கீம் ஏமாற்றி வந்த கசப்பான அனுபவங்களை, முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை ஆதரவாளர்கள் மறந்து விட்டதாக

மேலும்...
நௌசாத்துக்கு எதிரான மு.கா.வினரின் ஆர்ப்பாட்டம், சம்மாந்துறையில் தோல்வி

நௌசாத்துக்கு எதிரான மு.கா.வினரின் ஆர்ப்பாட்டம், சம்மாந்துறையில் தோல்வி 0

🕔26.Jan 2018

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் –சம்மாந்துறையின் முன்னாள் தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தல் வேட்பாளருமான ஏ.எம். நௌசாத்துக்கு எதிராக, இன்று ஜும்மாத் தொழுகையை தொடர்ந்து பத்ர் ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்ட நடவடிக்யொன்று, தோல்வியில் முடிவடைந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தை மு.காங்கிரஸினர் ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிய வருகிறது. குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானவுடனேயே சம்மாந்துறை மக்களின் பலத்த

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அட்டாளைச்சேனை நசீர் நியமனம்; புதிது செய்தித்தளத்துக்கு அவரே உறுதிப்படுத்தினார்

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அட்டாளைச்சேனை நசீர் நியமனம்; புதிது செய்தித்தளத்துக்கு அவரே உறுதிப்படுத்தினார் 0

🕔25.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை, ‘புதிது’ செய்தித்தளத்திடம் அவரே உறுதிப்படுத்தினார். மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த எம்.எச்.எம். சல்மான் கடந்த வாரம், அந்தப் பதவியினை ராஜிநாமா செய்திருந்தார். அதன்போது ஏற்பட்ட வெற்றிடத்துக்கே நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனைக்கு

மேலும்...
மரச் சின்னம்தான் முஸ்லிம்களின் ஜீவ நாடி என்றோர், 08 சின்னங்களில் போட்டியிடுகின்றனர்: அமைச்சர் றிசாட் விமர்சனம்

மரச் சின்னம்தான் முஸ்லிம்களின் ஜீவ நாடி என்றோர், 08 சின்னங்களில் போட்டியிடுகின்றனர்: அமைச்சர் றிசாட் விமர்சனம் 0

🕔24.Jan 2018

  மரச்சின்னமே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்கான ஜீவநாடி எனக் கூறி வந்தோர், இந்தத் தேர்தலில் எட்டு சின்னங்களில் களமிறங்கி, ‘சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறமாட்டாது’ என, மேடைகளிலே அடித்துக் கூறி வருவது, மக்களை முட்டாள்களாக்கும் செயல் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று

மேலும்...
சாணக்கியத்தின் சவாலும், வித்துவானின் பரிசும்

சாணக்கியத்தின் சவாலும், வித்துவானின் பரிசும் 0

🕔23.Jan 2018

– ஏ.கே. மிஸ்பாஹுல் ஹக் – மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூதிடம் அமைச்சர் ஹக்கீம் பற்றிய ரகசிய ஆவணங்கள் உள்ளன  என்கிற கதைகள், மிக நீண்ட காலமாக நிலவி வருகின்றன. அக் கதை உண்மையா அல்லது பொய்யா என்பதை அறியும் காலம் நெருங்கிவிட்டது எனலாம்.அண்மையில் அமைச்சர் ஹக்கீம் பாலமுனையில் இடம்பெற்ற மு.கா.வின் பிரசாரக் கூட்டத்தில் வைத்து

மேலும்...
பிரதமரின் அமைச்சுக்களை ஜனாதிபதி கைப்பற்றவுள்ள நிலையில், ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு ஹக்கீம் கேட்கிறார்: ஹசனலி கிண்டல்

பிரதமரின் அமைச்சுக்களை ஜனாதிபதி கைப்பற்றவுள்ள நிலையில், ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு ஹக்கீம் கேட்கிறார்: ஹசனலி கிண்டல் 0

🕔23.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமுள்ள அமைச்சுப் பொறுப்புக்களை உள்ளுராட்சித் தேர்தலின் பின்னர், ஜனாதிபதி கையேற்கவுள்ளதாக கூறியிருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்குமாறு மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கட்ளையிட்டுக் கொண்டிருக்கின்றார் என, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி கூறினார்.நிந்தவூரில் நடைபெற்ற

மேலும்...
வட்டார பிரிப்பில் முஸ்லிம்களுக்கு அநீதி நடந்தபோது, ஐ.தே.கட்சி தலைமை அலட்டிக் கொள்ளவில்லை: ஹக்கீம் குற்றச்சாட்டு

வட்டார பிரிப்பில் முஸ்லிம்களுக்கு அநீதி நடந்தபோது, ஐ.தே.கட்சி தலைமை அலட்டிக் கொள்ளவில்லை: ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔23.Jan 2018

– அஹமட் – முஸ்லிம்களுக்கான வட்டார பிரிப்பு முறையில் அநியாயம் நடந்த போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை, அது தொடர்பில் அலட்டிக் கொள்ளவில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.குருணாகல் மாவட்டம் திவுரும்பொல பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.முஸ்லிம்

மேலும்...
வன்னி அமைச்சரின் பணத்துக்காக புத்தளத்தில் ஐ.தே.கட்சி குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது: ஹக்கீம் குற்றச்சாட்டு

வன்னி அமைச்சரின் பணத்துக்காக புத்தளத்தில் ஐ.தே.கட்சி குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது: ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔20.Jan 2018

கபடத்தனமாக சம்பாதித்த பணத்தின் மூலமாக புத்தளத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை குத்தகைக்கு எடுத்தவர்கள், இப்போது மக்களின் வாக்குகளுக்கு விலைபேசிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பணத்துக்காக புத்தளம் மக்கள், தங்களின் சுயகெளரவம், தன்மானம் என்பவற்றை இழக்கமாட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்துவார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்