காடைத்தன அரசியலுக்கு உயிர் கொடுக்க வேண்டாம்; உதுமாலெப்பை அணியினரை, தோற்கடித்து வெல்வோம் 0
– எம்.ஐ. இஸ்பான் (அட்டாளைச்சேனை) – அட்டாளைச்சேனை பிரசேத்தில் அரசியலை சாக்கடை நிலைக்கும், சட்டித்தனத்தின் உச்சத்துக்கும் எடுத்துச் சென்றவர்களில் முதன்மையானவரும், முக்கியமானவரும் யார் என்கிற கேள்வியொன்று முன்வைக்கப்பட்டால், அதற்கான விடை, எம்.எஸ். உதுமாலெப்பை என்பதாகவே இருக்கும். தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அமைச்சராக இருந்த போது, அந்த அதிகாரத்தினையும், தான் மாகாண சபை அமைச்சர்