பிரதமரின் அமைச்சுக்களை ஜனாதிபதி கைப்பற்றவுள்ள நிலையில், ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு ஹக்கீம் கேட்கிறார்: ஹசனலி கிண்டல்

🕔 January 23, 2018

– முன்ஸிப் அஹமட் –

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமுள்ள அமைச்சுப் பொறுப்புக்களை உள்ளுராட்சித் தேர்தலின் பின்னர், ஜனாதிபதி கையேற்கவுள்ளதாக கூறியிருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்குமாறு மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கட்ளையிட்டுக் கொண்டிருக்கின்றார் என, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி கூறினார்.

நிந்தவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ஏலம் போட்டுக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர்ளூ இம்முறை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிழக்கு அந்த வாக்குப் பலத்தை வார்த்துள்ளதாவும் ஹசனலி குற்றம் சாட்டினார்.

வீடியோ

Comments