முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் 02 கோடி பெற்றார்களா; தெளிவுபடுத்த வேண்டுமென, மக்கள் வேண்டுகோள்

🕔 January 23, 2018
– பாறுக் ஷிஹான் –

ரசாங்கத்திடமிருந்து இரண்டு கோடி ரூபா பணத்தை முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெற்றிருந்தால், அதற்கான காரணத்தை  மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட வடவு – செலவுத் திட்டம் தொடர்பிலான  விடயங்களுக்காக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 02 கோடி ரூபா நன்கொடையாக அரசாங்கம் வழங்கியதாக, ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர், அந்தப் பணத்தை தாங்கள் பெற்றதாக தெரிவித்துள்ளனர். ஆயினும், ஏனைய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பது போன்று, அந்தப் பணம் லஞ்சமாக வழங்கப்படவில்லை என்றும், தமது பிரதேச அபிவிருத்திக்காக அந்த நிதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தவிர, குறித்த நிதியினை தாம் எந்தெந்த அபிவிருத்திக்காக ஒதுக்கியுள்ளோம் என்கிற விடயங்களையும் அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தியும் உள்ளனர்.

இந்நிலையில், அவ்வாறானதொரு பணத் தொகை, முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே,  இவ்விடயம் தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தரப்பினர் தெளிவு படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்