அதிபரை முழங்காலில் வைத்ததாக கூறப்படும், ஊவா முதலமைச்சருக்கு பிணை

🕔 January 23, 2018

திபர் ஒருவரை முழங்காலில் மண்டியிட வைத்தார் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை காலை பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த முதலமைச்சர், பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே, அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில், அவரை விடுவிக்குமாறு நீதிவான் நயந்த சமரதுங்க இதன்போது உத்தரவிட்டார்.

முதலமைச்சரின் பணிப்புரைக்கு கட்டுப்படவில்லை என்பதற்காக, பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் ஒருவரை, முதலமைச்சர் தனது முன்னிலையில் முழங்காலில் மண்டயிட வைத்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Comments