வட்டார பிரிப்பில் முஸ்லிம்களுக்கு அநீதி நடந்தபோது, ஐ.தே.கட்சி தலைமை அலட்டிக் கொள்ளவில்லை: ஹக்கீம் குற்றச்சாட்டு

🕔 January 23, 2018

– அஹமட் –

முஸ்லிம்களுக்கான வட்டார பிரிப்பு முறையில் அநியாயம் நடந்த போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை, அது தொடர்பில் அலட்டிக் கொள்ளவில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

குருணாகல் மாவட்டம் திவுரும்பொல பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

முஸ்லிம் காங்கிரசை பாதுகாப்பதற்கான உரிமை தங்களுக்கு உள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டிய மு.காங்கிரசின் தலைவர்ளூ தங்கள் கட்சியை அடி மட்டத்தில் அழித்து வித்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்நேரமும் சாம்பிராணி பிடித்துக் கொண்டிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்