Back to homepage

Tag "சாய்ந்தமருது"

சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு

சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு 0

🕔20.Feb 2020

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நகர சபையை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இன்று வியாழக்கிழமை அறிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது, இதனைக் கூறினார். சாய்ந்தமருதுக்கான நகர சபையை வழங்குவது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கிகாரம்

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் சர்ச்சை; வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படுமா?

சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் சர்ச்சை; வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படுமா? 0

🕔20.Feb 2020

சாய்ந்தமருது நகரசபை பிரகடனம் செய்யப்பட்டமை குறித்து நேற்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை எழுந்ததாகவும், அதனையடுத்து, குறித்த பிரகடனம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கை ரத்துச் செய்யப்படும் அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் ‘தமிழன்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சாய்ந்தமருது நகர சபையைப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தமையே தனக்கு தெரியாதென அமைச்சரவையில் பொதுநிர்வாக

மேலும்...
நெருப்பில் பூத்த மலர்

நெருப்பில் பூத்த மலர் 0

🕔18.Feb 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – சாய்ந்தமருது பிரதேச மக்கள் – பல வருடங்களாக கோரி வந்த உள்ளுராட்சி சபையை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (14ஆம் திகதி) நள்ளிரவு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமனி மூலம், சாய்ந்தமருதுக்கு நகர சபையை வழங்குவதாக, பொறுப்புக்குரிய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார். பல்வேறு விதமான சாத்வீக மற்றும்

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை உதயம்; வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

சாய்ந்தமருது நகர சபை உதயம்; வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0

🕔15.Feb 2020

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருதுக்கான புதிய நகர சபையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியானது. 2162/50 இலக்கத்தையுடைய மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் படி, 2022ஆம் ஆண்டு மார்ச்

மேலும்...
அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா?

அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா? 0

🕔11.Feb 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் என்பது அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த உலகு. அங்கு எதுவும் சாத்தியமாகலாம். மரணித்தவர்கள் ‘எழுந்து வந்து’ தேர்தல்களில் வாக்களிக்கும் ஆச்சரியங்களை நாம் கண்டதில்லையா?. வெல்வார் என்று நம்பப்படுவோர் தோற்பதும், “இனி அவர் அவ்வளவுதான்” என்று சொல்லப்படுவோர் மீண்டெழுவதும் அரசியல் உலகில் அடிக்கடி நடக்கும் அதிசயங்களாகும். 20 வருடங்களுக்கும் மேலாக

மேலும்...
கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சலீம், சுயவிருப்பில் ஓய்வு

கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சலீம், சுயவிருப்பில் ஓய்வு 0

🕔31.Jan 2020

– நூருல் ஹுதா உமர் – கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய ஏ.எல்.எம். சலீம் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் சுயவிருப்பில் ஓய்வு பெறுகிறார். இவர் சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்டவர். பயிற்றப்பட்ட ஆசிரியராக லுனுகலை சோலேன்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது முதலாவது அரச சேவை நியமனத்தைப் பெற்ற இவர்,

மேலும்...
பொதுத் தேர்தலில் சலீம் களமிறங்குவார்: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் பகிரங்க அறிவிப்பு

பொதுத் தேர்தலில் சலீம் களமிறங்குவார்: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் பகிரங்க அறிவிப்பு 0

🕔5.Jan 2020

– நூருல் ஹுதா உமர் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் பிரதேச செயலாளரும், இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம் போட்டியிடுவார் என சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா இன்று ஞாயிற்றுக்கிழமை பகிரங்கமாக அறிவித்தார். சாய்ந்தமருது நகரசபை இலக்கை அடையும் நோக்கில் போராடி வரும் குழுவினரின்

மேலும்...
காஸிம் எழுதிய ‘கரைவாகு அன்றும் இன்றும்’ நூல் வெளியீட்டு விழா

காஸிம் எழுதிய ‘கரைவாகு அன்றும் இன்றும்’ நூல் வெளியீட்டு விழா 0

🕔2.Dec 2019

– எம்.வை. அமீர் – ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம். காஸிம் எழுதிய ‘கரைவாகு அன்றும் இன்றும்’ எனும் நூலின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு பாவா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருதின் வரலாற்றை கூறும் வகையில் எழுதப்பட்ட மேற்படி நூலின் வெளியீட்டு விழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல்.

மேலும்...
அச்சம்

அச்சம் 0

🕔29.Oct 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருப்பதில்லை. அநேகமாக எல்லா வேட்பாளர்களும் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டேயிருக்கின்றனர். அவற்றில் நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றவையும் உள்ளன. ஆனாலும் அவை குறித்து வாக்குறுதிகளை வழங்குவோர் அலட்டிக் கொள்வதில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதுதான் அவர்களின் உடனடி தேவையாகும். வாக்குறுதி என்பது ஒரு வகையான கடனாகும். வாக்குறுதியை

மேலும்...
கண்ணீர் கடல்

கண்ணீர் கடல் 0

🕔14.Oct 2019

சடலத்துடன் பயணித்து, ஆமை ரத்தம் குடித்து 20 நாட்களின் பின்னர் உயிர் மீண்ட, காணாமல் போன மீனவர்களின் திகில் அனுபவம் – மப்றூக் – இயந்திரம் பழுதடைந்த தமது படகில் இருந்தவாறு, கடலில் 20 நாட்களாக திசையறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவர், தங்களுடன் பயணித்த சக மீனவரை இழந்த நிலையில்,

மேலும்...
காணாமல் போய் மீட்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு, கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் நிதியுதவி

காணாமல் போய் மீட்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு, கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் நிதியுதவி 0

🕔13.Oct 2019

– பாறுக் ஷிஹான் – கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்று  22 நாட்களின் பின்னர்  கரை திரும்பிய  மீனவர்களின் குடும்பங்களுக்கு முதற்தொகுதி கொடுப்பனவு ஒன்றினை தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்   சப்ராஸ் மன்சூர் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வைத்துள்ளார். சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மீனவ குடும்பங்களின் வீடுகளுக்கு

மேலும்...
இறந்தவரின் உடலை 06 நாட்கள் வைத்திருந்த பின்னர், கடலில் விட்டோம்: காணாமல் போய் கரை திரும்பிய சாய்ந்தமருது மீனவர்களின் திகில் அனுபவம்

இறந்தவரின் உடலை 06 நாட்கள் வைத்திருந்த பின்னர், கடலில் விட்டோம்: காணாமல் போய் கரை திரும்பிய சாய்ந்தமருது மீனவர்களின் திகில் அனுபவம் 0

🕔11.Oct 2019

– நூறுள் ஹுதா உமர் – கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்த நிலையில், 22 நாட்களின் பின் கரை திரும்பிய சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்றிரவு தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சாய்ந்தமருதைச் சேர்ந்த றியாஸ் மற்றும் ஹாரிஸ்எனப்படும் மேற்படி மீனவர்கள், திருகோணமலை பொலிஸ் நிலையம் ஊடாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திடம் நேற்று வியாழக்கிழமை

மேலும்...
கல்முனை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தால், உள்ளுராட்சி சபைகள் பிரகடனம் செய்யப்படும்: மு.கா. தலைவர்

கல்முனை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தால், உள்ளுராட்சி சபைகள் பிரகடனம் செய்யப்படும்: மு.கா. தலைவர் 0

🕔1.Aug 2019

கல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக அலகுப் பிரச்சினைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால், இதைப்போன்ற இன்னுமொரு சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்முனை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகம், சாய்ந்தமருது விவகாரம்; ஒரே நேரத்தில் தீர்வு: ஹக்கீம் தெரிவிப்பு

கல்முனை உப பிரதேச செயலகம், சாய்ந்தமருது விவகாரம்; ஒரே நேரத்தில் தீர்வு: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔24.Jul 2019

கல்முனையில் தோன்றியுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு எந்த தரப்புக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் கூட்டணியில் கைச்சாத்திடும் நிகழ்வு ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவிருப்பதால், அதற்கு முன்னர் பிரதமர் நல்லதொரு முடிவை அறிவிப்பார் என தான் நம்புவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
சஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில் வாடகை வீடு கொடுத்தது எப்படி: தகவல்களைப் பகிர்ந்தார் வீட்டு உரிமையாளர்

சஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில் வாடகை வீடு கொடுத்தது எப்படி: தகவல்களைப் பகிர்ந்தார் வீட்டு உரிமையாளர் 0

🕔12.Jul 2019

சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது. அதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப்பட்டு சுமார் இரண்டரை மாதங்களாக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி, சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக அழுகிறார். கடந்த ஏப்ரல் 21ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்