காஸிம் எழுதிய ‘கரைவாகு அன்றும் இன்றும்’ நூல் வெளியீட்டு விழா
– எம்.வை. அமீர் –
ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம். காஸிம் எழுதிய ‘கரைவாகு அன்றும் இன்றும்’ எனும் நூலின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு பாவா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருதின் வரலாற்றை கூறும் வகையில் எழுதப்பட்ட மேற்படி நூலின் வெளியீட்டு விழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல். பண்டாரநாயக்க கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை. சலீம், கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது விவசாய சேவைகள் குழுவின் தவிசாளர் எம்.எம்.எம். ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நூலின் முதற்பிரதியை நூலாசிரியரின் பாரியார் பாத்திமா காஸீம் பெற்றுக்கொண்டார். நூல் மற்றும் நூலாசிரியர் தொடர்பான அறிமுக உரையை ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. பீர் முகம்மட் வழங்கினார்.
இதன்போது நூலாசிரியர் எம்.எம். காஸிம் கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.