பௌத்த அடிப்படைவாதத்தை பரப்ப, பொதுபல சேனாவுக்கு நோர்வே பணம் வழங்கியது; விஜேதாஸவின் குற்றச்சாட்டுக்கு டிலந்த மறுப்பு

பௌத்த அடிப்படைவாதத்தை பரப்ப, பொதுபல சேனாவுக்கு நோர்வே பணம் வழங்கியது; விஜேதாஸவின் குற்றச்சாட்டுக்கு டிலந்த மறுப்பு 0

🕔29.Feb 2020

நோர்வே அரசிடம் நிதியை பெற்றுக்கொண்டு, பொதுபல சேனா அமைப்பு, இலங்கைக்குள் பௌத்த அடிப்படைவாதத்தை பரப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என, பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாஸ ராஜபக்ஷ வழங்கிய வாக்குமூலம்

மேலும்...
அக்கரைப்பற்றில் சமுர்த்தி உத்தியோகத்தர், கப்பம் கேட்டு தாக்கியதாக, விவசாய அமைப்பின் தலைவர் பொலிஸில் முறைப்பாடு

அக்கரைப்பற்றில் சமுர்த்தி உத்தியோகத்தர், கப்பம் கேட்டு தாக்கியதாக, விவசாய அமைப்பின் தலைவர் பொலிஸில் முறைப்பாடு 0

🕔29.Feb 2020

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ஐ.எல்.எச். வஹாப் என்பவர், கப்பம் கோரி தன்னைத் தாக்கியதாக அதே பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய அமைப்பொன்றின் தலைவரான எம்.ஏ.சி. ஹபீபுர் ரஹ்மான் என்பவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் அக்கரைப்பற்று நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை

மேலும்...
கூட்டணியின் வேட்புமனுக் குழுவின் தலைவர் நான் மட்டும்தான்: சஜித் தெரிவிப்பு

கூட்டணியின் வேட்புமனுக் குழுவின் தலைவர் நான் மட்டும்தான்: சஜித் தெரிவிப்பு 0

🕔29.Feb 2020

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்புமனு குழுவினுடைய தலைவர் தான் மட்டும்தான் என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார். “நான் பெயரளவில் பிரதமர் வேட்பாளர் இல்லை என்பதையும், பெயரளவில் வேட்பு மனு குழுவின் தலைவர் இல்லை என்பதையும் ஞாபகத்தில் வைத்து

மேலும்...
கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் அதிகம் பரவுகிறது; ஈரான் கடுமையாகப் பாதிப்பு

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் அதிகம் பரவுகிறது; ஈரான் கடுமையாகப் பாதிப்பு 0

🕔28.Feb 2020

கொரோனா வைரஸ் தொற்று ஒரு ‘முக்கிய கட்டத்தை’ எட்டியுள்ளது என்றும், உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவக்கூடிய நிலையுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்தார். உலக நாடுகள் கொரோனா தொற்று பரவாமல் இருக்க போராடி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது. இரண்டாவது நாளாக சீனாவுக்கு வெளியே அதிகப்படியான கொரோனா

மேலும்...
முன்னாள் அமைச்சர் பஷீர் தலைமையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் பஷீர் தலைமையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் ஆரம்பம் 0

🕔27.Feb 2020

– அஹமட் – அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றினை, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், இன்று வியாழக்கிழமை ஏறாவூரில் ஆரம்பித்து வைத்தார். அந்த வகையில் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக ‘சப்ரிக் கமக்’ எனும், மக்கள் பங்களிப்பு கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்

மேலும்...
ரணிலுக்கு தேசியப்பட்டியல்: பொன்சேகா தெரிவிப்பு

ரணிலுக்கு தேசியப்பட்டியல்: பொன்சேகா தெரிவிப்பு 0

🕔27.Feb 2020

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது தேசிய பட்டியலின் ஊடாக களமிறங்க கூடும் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ராகமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
காலி, மாத்தறை மாவட்டங்கள் இம்முறை தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கின்றன: தேசப்பிரிய தெரிவிப்பு

காலி, மாத்தறை மாவட்டங்கள் இம்முறை தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கின்றன: தேசப்பிரிய தெரிவிப்பு 0

🕔27.Feb 2020

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்குரிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்கள் இம்முறை மொனராகல மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு வழங்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார். இதன்போது, பொதுத்தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல் நிலவுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்

மேலும்...
30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐ.நா.வில் அமைச்சர் தினேஷ் அறிவித்தார்

30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐ.நா.வில் அமைச்சர் தினேஷ் அறிவித்தார் 0

🕔26.Feb 2020

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இடம்பெறும் கூட்டத்தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இதனை உத்தியோகபூர்வமாக இன்று புதன்கிழமை அறிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல் காலத்தை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தல் காலத்தை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய 0

🕔26.Feb 2020

நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதிக்கும் மே 04ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறினார். தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிக்கே உள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

மேலும்...
ரஞ்சனுக்குப் பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சனுக்குப் பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு 0

🕔26.Feb 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுவிக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு 15ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆயினும், வெளிநாடு செல்வதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினுடையவை

மேலும்...
மஹர சிறைச்சாலை பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை: ரிஷாட் பதியுதீன் கண்டனம்

மஹர சிறைச்சாலை பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை: ரிஷாட் பதியுதீன் கண்டனம் 0

🕔26.Feb 2020

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான

மேலும்...
வறட்சியான காலநிலை காரணமாக 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வறட்சியான காலநிலை காரணமாக 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு 0

🕔26.Feb 2020

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாவட்டங்களில் 02 லட்சத்து 28,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் களுத்துறை மாவட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டத்தில் சுமார் 02 லட்சத்து 15,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. குடிநீரில் கடல்நீர் கலந்ததன் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பேருவளை, பாணந்துறை, களுத்துறை

மேலும்...
கட்சிகளின் சின்னத்தை எப்போது மாற்றலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம்

கட்சிகளின் சின்னத்தை எப்போது மாற்றலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம் 0

🕔25.Feb 2020

அரசியல் கட்சிகளின் சின்னத்தை மாற்றுவதாயின், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஒரு வார காலப்பகுதியில் மாத்திரமே அதனைச் செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றில் ஒளிரப்பான அரசியல் நிகழ்ச்சியில் நேற்று திங்கட்கிழமை இரவு கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். “தற்போது பல அரசியல் கட்சிகள் சின்னத்தை

மேலும்...
பாணின் விலை குறைகிறது: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

பாணின் விலை குறைகிறது: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு 0

🕔25.Feb 2020

பாணின் விலை 05 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜனவர்த்தன இதனைக் கூறியுள்ளார். இதற்கிணங்க நாளை 26ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் இந்த விலை குறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேக்கரி உரிமையாளர்களுடன் இன்று இடம்பெற்ற

மேலும்...
500 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட, வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் 11 பேர், பணியிலிருந்து இடைநிறுத்தம்

500 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட, வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் 11 பேர், பணியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔25.Feb 2020

– அஸ்ரப் ஏ சமத் – வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஹம்பாந்தோட்ட காரியாலயத்தில், கடந்த ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட 500 மில்லியன் ரூபா நிதி மோசடியுடன் தொடர்புடைய 11 அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, மேற்படி மோசடி தொடர்பில் ஈடுபட்டவர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினா் விசாரனைகள் மேற்கொண்டதை அடுத்து, குறித்த 11 அதிகாரிகளையும்  பொலிஸார்

மேலும்...