Back to homepage

Tag "கடுவெல நீதவான் நீதிமன்றம்"

‘யுக்திய’ நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட வாகனங்களை, உரிமையாளர்களிடம் வழங்குமாறு உத்தரவு

‘யுக்திய’ நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட வாகனங்களை, உரிமையாளர்களிடம் வழங்குமாறு உத்தரவு 0

🕔17.Feb 2024

‘யுக்திய’ எனும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பல வாகனங்களை, பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு – நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், ஏறக்குறைய 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்களை ஒப்படைக்குமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. விசாரணையின் பொருட்டு வாகனங்களை

மேலும்...
நாடாளுமன்ற பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்ட மூன்று சிற்றூழிர்களில் ஒருவருக்கு பிணை

நாடாளுமன்ற பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்ட மூன்று சிற்றூழிர்களில் ஒருவருக்கு பிணை 0

🕔31.Jan 2024

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் இருவரிடம் தவறாக நடந்து கொண்டார்கள் எனும் குற்றச்சாட்டில் நேற்று (30) கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர்கள் மூவரில் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சிற்றூழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று (30)

மேலும்...
சீ.எஸ்.என். ஒளிபரப்பு வாகனத்தை, ரூபவாஹினி பொறுப்பேற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சீ.எஸ்.என். ஒளிபரப்பு வாகனத்தை, ரூபவாஹினி பொறுப்பேற்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Aug 2016

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் வெளிக்கள ஔிபரப்பு வாகனத்தை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பொறுப்பேற்க வேண்டுமென்ற கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. கடுவெல நீதவானிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றம் மீண்டுமொரு உத்தரவைப் பிறப்பிக்கும் வரையில், சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் வெளிக்கள ஔிபரப்பு வாகனத்தை, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்

மேலும்...
சீ.எஸ்.என். நிறுவனத்தின் பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு உத்தரவு

சீ.எஸ்.என். நிறுவனத்தின் பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு உத்தரவு 0

🕔10.Aug 2016

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சட்டவிரோதமான முறையில் கிடைத்த  157.5 மில்லியன் ரூபா பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. நிதி மோசடி விசாரணை பிரிவினர் இன்றைய தினம் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக்காலத்தில் சீ.எஸ்.என். நிறுவனத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாக

மேலும்...
பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை 0

🕔8.Aug 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை, இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, கடுவலை நீதவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, விளக்க

மேலும்...
பசில் ராஜபக்ஷ; தொடர்ந்தும் ‘உள்ளே’

பசில் ராஜபக்ஷ; தொடர்ந்தும் ‘உள்ளே’ 0

🕔1.Aug 2016

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ – இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் தம்மிக ஹேமபால உத்தரவிட்டார். திவிநெகும அபிவிருத்தி நிதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில்,

மேலும்...
பசில் ராஜபக்ஷவை ஓகஸ்ட் முதலாம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

பசில் ராஜபக்ஷவை ஓகஸ்ட் முதலாம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔18.Jul 2016

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக, இன்று திங்கட்கிழமை காலை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். இதனையடுத்து. அவர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோதே, அவரை

மேலும்...
உகண்டா செல்வதற்கான யோசிதவின் கோரிக்கை நிராகரிப்பு

உகண்டா செல்வதற்கான யோசிதவின் கோரிக்கை நிராகரிப்பு 0

🕔7.May 2016

யோஷித ராஜ­பக்ஷ – உகண்­டா­வுக்கு விஜ­யம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை கடுவலை நீதவான் நீதி­மன்றம் நிராகரித்துள்­ளது. உகண்­டா புதிய ஜனா­தி­ப­தியின் பத­வி­யேற்பு நிகழ்வில், தனது தந்­தை­ மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அவருடன் உகண்டா செல்வதற்கான அனு­மதியினை வழங்­கு­மாறும் கோரி, யோஷிதவின் சட்டத்தரணிகள் மனுத்தாக்கல் செய்தனர். இந்த நிலையில், மேற்படி மனுவை நிரா­க­ரித்த

மேலும்...
யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔25.Feb 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் நால்வரை, தொடர்ந்தும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க ஹேமபால இந்த உத்தரவினை வழங்கினார். பணச்சலவைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட

மேலும்...
யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; கடுவெல நீதிமன்றம் உத்தரவு

யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; கடுவெல நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Feb 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. சீ.எஸ்.என். ஊடக நிறுவனம் தொடர்பில் பணச் சலவையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி 30 ஆம் திகதி கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ, விளக்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்