யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; கடுவெல நீதிமன்றம் உத்தரவு

🕔 February 11, 2016

Yositha - 8756முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சீ.எஸ்.என். ஊடக நிறுவனம் தொடர்பில் பணச் சலவையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி 30 ஆம் திகதி கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ, விளக்க மறியிலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று கடுவெல நீதிமன்றத்தில் யோசித ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதபோது, மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட, சீ.எஸ்.என். நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளான ரொஹான் வெலிவிட்ட மற்றும் நிஷாந்த ரணதுங்க உள்ளிட்ட நான்கு பேரும், இன்று யோசிதவுடன் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அவர்களையும் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்