சீ.எஸ்.என். ஒளிபரப்பு வாகனத்தை, ரூபவாஹினி பொறுப்பேற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 August 25, 2016

CSN - 09சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் வெளிக்கள ஔிபரப்பு வாகனத்தை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பொறுப்பேற்க வேண்டுமென்ற கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கடுவெல நீதவானிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றம் மீண்டுமொரு உத்தரவைப் பிறப்பிக்கும் வரையில், சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் வெளிக்கள ஔிபரப்பு வாகனத்தை, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பொறுப்பேற்றுப் பயன்படுத்துவதுடன், அதனை மேற்பார்வை செய்யவேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டது.

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோ சித ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்