அரசாங்கம் வழங்கும் நிதியை பங்கிடுவது தலைவர்களின் பணியல்ல: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

அரசாங்கம் வழங்கும் நிதியை பங்கிடுவது தலைவர்களின் பணியல்ல: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் 0

🕔24.Mar 2024

புத்தாக்க சிந்தனைகளோடு சமூகத்தை வழிப்படுத்தி நெறிப்படுத்தி, மக்கள் தமக்கான வாழ்வாதாரங்களை சுயமாக தேடிக்கொள்ளும் வழிவகைகளை உருவாக்கிக் கொடுப்பதே தலைவர்களின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசாங்கம் வழங்குகின்ற நிதியை பங்கிடுவது சமூகத் தலைவர்களின் பணியல்ல என்று – கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். கிழக்கின் கேடயம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடலும் இப்தார்

மேலும்...
கற்கை நெறிகளை  பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கற்கை நெறிகளை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔24.Mar 2024

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (24) தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எச்.யூ. சுசந்த நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி பற்றிய ‘கதை’; 03 வாரங்களுக்கு முன் கிடைத்த தகவலை வைத்தே கூறினேன்: மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி பற்றிய ‘கதை’; 03 வாரங்களுக்கு முன் கிடைத்த தகவலை வைத்தே கூறினேன்: மைத்திரி 0

🕔24.Mar 2024

மூன்று வாரங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்ட தகவலின் அடிப்படையிலேயே – ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என தனக்குத் தெரியும் என்று – தான் கூறியதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மூன்று வாரங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நான் அந்த விடயத்தை வெளியிட்டேன்.

மேலும்...
மரதன் ஓடிய மாணவன் மரணம்; மூடிக் கிடக்கும் திருக்கோவில் வைத்தியசாலை: நடந்தவை என்ன?

மரதன் ஓடிய மாணவன் மரணம்; மூடிக் கிடக்கும் திருக்கோவில் வைத்தியசாலை: நடந்தவை என்ன? 0

🕔24.Mar 2024

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – மரதன் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்தமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. மறுபுறம், அந்த மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியமையினை அடுத்து, குறித்த வைத்தியசாலை இம்மாதம்

மேலும்...
சிஐடிக்கு வருமாறு மைத்திரிக்கு அழைப்பு

சிஐடிக்கு வருமாறு மைத்திரிக்கு அழைப்பு 0

🕔24.Mar 2024

உயிர்த்த தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக – அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) அழைத்துள்ளது. இதன்படி, மைத்திரிபாலவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நாளையதினம் அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் – வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருக்கிறார்.

மேலும்...
பால் மாவின் விலை இன்று நள்ளிரவு குறைகிறது

பால் மாவின் விலை இன்று நள்ளிரவு குறைகிறது 0

🕔24.Mar 2024

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (24) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு கிலோ எடையுள்ள பால் மாவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படும். அதேவேளை 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
ஜனாதிபதி ரணிலுக்கு இன்று 75 வயது

ஜனாதிபதி ரணிலுக்கு இன்று 75 வயது 0

🕔24.Mar 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 75ஆவது பிறந்த தினம் இன்றாகும். கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று- கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்ற முதல் ஜனாதிபதியாக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 1977 ஆம் ஆண்டு பியகம தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் பிரவேசித்த ஜனாதிபதி, அதன் பின்னர் தொடர்ந்து 47

மேலும்...
மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு

மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு 0

🕔24.Mar 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரியாகச் செயல்பட்டவர் குறித்து தனக்குத் தெரியும்

மேலும்...
உடலுறவு தொடர்பான சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதியமைச்சர் தெரிவிப்பு

உடலுறவு தொடர்பான சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔23.Mar 2024

பதினாலு வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் தமது  விருப்பத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் உடலுறவு கொண்டால் – அதற்கான தண்டனையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருந்த சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று (23) தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர்

மேலும்...
மைத்திரியை கைது செய்யுமாறு, மனோ, காவிந்த எம்.பிகள் வலியுறுதல்

மைத்திரியை கைது செய்யுமாறு, மனோ, காவிந்த எம்.பிகள் வலியுறுதல் 0

🕔23.Mar 2024

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்துமாறு – எதிர்க்கட்சி எம்.பி.க்களான மனோ கணேசன் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் இன்று (23) கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை உடனடியாக பொலிஸார் விசாரிக்க வேண்டும்

மேலும்...
ரஷ்யாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் பலி: காயப்பட்ட 145 பேரில் 60 பேரின் நிலை கவலைக்கிடம்

ரஷ்யாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் பலி: காயப்பட்ட 145 பேரில் 60 பேரின் நிலை கவலைக்கிடம் 0

🕔23.Mar 2024

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் எல்லையில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாகவும், 145 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்களில் 60 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தது நான்கு பேர்

மேலும்...
காத்தான்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில், அமைச்சர் அலி சப்ரிக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் குர்ஆன் அன்பளிப்பு

காத்தான்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில், அமைச்சர் அலி சப்ரிக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் குர்ஆன் அன்பளிப்பு 0

🕔22.Mar 2024

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (22) வெள்ளிக்கிழமை நோன்பு துறக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இன்றைய இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்குபற்றினர் என, ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி,

மேலும்...
இலங்கை முன்னேறுவதற்கு ஜப்பானை உதாரணமாக கொள்ளுமாறு அந்த நாட்டு தூதுவர் தெரிவிப்பு

இலங்கை முன்னேறுவதற்கு ஜப்பானை உதாரணமாக கொள்ளுமாறு அந்த நாட்டு தூதுவர் தெரிவிப்பு 0

🕔22.Mar 2024

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார். நில மானிய முறைமை சமூகத்திலிருந்து புதிய ஆட்சி முறையை நோக்கிய ஜப்பானின் பயணத்திற்கும் இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை சுட்டிக்காட்டிய தூதுவர்,

மேலும்...
மாதவிடாய்  நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம்

மாதவிடாய் நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம் 0

🕔22.Mar 2024

பாடசாலை மாணவிகளுக்கு மாவிடாய் காலத்துக்குரிய சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள 08 லட்சம் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும், இதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்குத் தெரியும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ஈஸ்டர் தின தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்குத் தெரியும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி 0

🕔22.Mar 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிட தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (22) ஊடகங்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி, இது தொடர்பில் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தாலோ அல்லது உத்தரவு பிறப்பித்தாலோ அது தொடர்பான தகவல்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்