ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி பற்றிய ‘கதை’; 03 வாரங்களுக்கு முன் கிடைத்த தகவலை வைத்தே கூறினேன்: மைத்திரி

🕔 March 24, 2024

மூன்று வாரங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்ட தகவலின் அடிப்படையிலேயே – ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என தனக்குத் தெரியும் என்று – தான் கூறியதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மூன்று வாரங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நான் அந்த விடயத்தை வெளியிட்டேன்.

நீதிமன்றம் உத்தரவிட்டால், ரகசியமாக சாட்சியம் அளிக்க தயாராக உள்ளேன்” என, அவர் கூறியுள்ளார்.

வெளிப்படையாக சாட்சியமளித்தால், தனதும் தன்னுடைய குடும்பத்தாரினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை காரணம் காட்டி, ரகசிய அறிக்கையை வழங்குவதற்கான தனது விருப்பத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்தியுள்ளார்.

“இது வெறுமனே அரசியல் தாக்கங்கள் ஏற்படுத்துவதற்கான விஷயம் அல்ல. நான் மிகவும் நேர்மையான அறிக்கையை வெளியிடுகிறேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, சிஐடி-யில் ஆஜராகி, தனது தகவல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக உள்ளார் என, பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

தொடர்பான செய்தி: சிஐடிக்கு வருமாறு மைத்திரிக்கு அழைப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்