சிஐடிக்கு வருமாறு மைத்திரிக்கு அழைப்பு

🕔 March 24, 2024

யிர்த்த தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக – அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) அழைத்துள்ளது.

இதன்படி, மைத்திரிபாலவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நாளையதினம் அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் – வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருக்கிறார்.

மத நிகழ்வொன்றில்  அண்மையில் கலந்து கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த தின தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என்றும்  நீதிமன்றத்தால் கோரிக்கை விடுக்கப்படுமாயின் அல்லது உத்தரவிடப்படுமாயின் அது தொடர்பான விபரங்களை வெளிப்படுத்துவதற்கு தான் தயார் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தொடர்பான செய்தி: மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்