ரஷ்யாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் பலி: காயப்பட்ட 145 பேரில் 60 பேரின் நிலை கவலைக்கிடம்

🕔 March 23, 2024

ஷ்ய தலைநகர் மொஸ்கோவின் எல்லையில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாகவும், 145 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர்களில் 60 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறைந்தது நான்கு பேர் உடல் முழுவதும் மறைத்தவாறு உடை அணிந்துகொண்டு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

 இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருந்ததபோது – அரங்கிற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன்போது  கட்டடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்தது மட்டுமின்றி, மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஐஎஸ் தீவிரவாதக் குழு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது இவ்வாறிருக்க மொஸ்கோவில் ‘பெரிய கூட்டங்களை’ குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடத்தியோர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்