சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மைத்திரி குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மைத்திரி குற்றச்சாட்டு 0

🕔10.Jan 2022

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, தேர்தலின் பின்னர் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை குழம்பில் உள்ள கறிவேப்பில்லை போல் தூக்கி எறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையில்

மேலும்...
நாடு நாளை தொடக்கம் இருளில் மூழ்கும்

நாடு நாளை தொடக்கம் இருளில் மூழ்கும் 0

🕔9.Jan 2022

நாட்டில் நாளை (10) தொடக்கம் ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டது. இலங்கை பெற்றோலியக்

மேலும்...
பணத்தை அச்சிடுவதில்லை: மத்திய வங்கி தீர்மானம்

பணத்தை அச்சிடுவதில்லை: மத்திய வங்கி தீர்மானம் 0

🕔9.Jan 2022

பணத்தை தொடர்ந்தும் அச்சிடுவதில்லை என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. பணத்தை அச்சிடுவதற்கு பதிலாக தேவையான பணத்தை சந்தையில் இருந்து திரட்டுவது என அந்த வங்கி முடிவு செய்துள்ளது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 1.3 ட்ரில்லியன் (130,000 கோடி) ரூபாய் பணம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளது. கட்டுப்பாடு இன்றி தொடர்ந்தும் அதிகளவில் பணத்தை அச்சிட்டு

மேலும்...
ரூபவாஹினிக்கு புதிய தலைவர் நியமனம்

ரூபவாஹினிக்கு புதிய தலைவர் நியமனம் 0

🕔8.Jan 2022

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சொனால குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்பு தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையின் தலைவராக பணியாற்றினார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றிய முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் அண்மையில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
தரமற்ற உரம் கொண்டு வந்த சீன நிறுவனத்துக்கு 140 கோடி ரூபா செலுத்தப்பட்டது

தரமற்ற உரம் கொண்டு வந்த சீன நிறுவனத்துக்கு 140 கோடி ரூபா செலுத்தப்பட்டது 0

🕔7.Jan 2022

இலங்கைக்கு தரமற்ற இயற்கை உரத்தைக் கொண்டுவந்த சீன நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் டொலர்கள் (இலங்கை பெறுமதியில் சுமார் 140 கோடி ரூபா) பணம் செலுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சேதன உரம், உரிய தரத்தில் இல்லாத நிலையில், அதனை அரசாங்கம் நிராகரித்திருந்தது. இதனால் குறித்த உரம் – கப்பலில் இருந்து இறக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இருந்தபோதும்

மேலும்...
அரிசி இறக்குமதி செய்ய மியன்மாருடன் உடன்படிக்கை

அரிசி இறக்குமதி செய்ய மியன்மாருடன் உடன்படிக்கை 0

🕔7.Jan 2022

அரிசியை இறக்குமதி செய்வதற்காக மியன்மாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒரு லட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. மியன்மார் அரசாங்கத்துடன் வர்த்தக அமைச்சு இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. பாதுகாப்பு கருதி நாட்டில் களஞ்சியப்படுத்தி வைக்கும் நோக்கில் இந்த அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்...
இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள ஆவணம் தொடர்பில், ஓட்டமாவடியில் நடந்த மு.கா உயர்பீடக் கூட்டம்: ஹக்கீமுடைய நாடகத்தில் நடந்தவை என்ன?

இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள ஆவணம் தொடர்பில், ஓட்டமாவடியில் நடந்த மு.கா உயர்பீடக் கூட்டம்: ஹக்கீமுடைய நாடகத்தில் நடந்தவை என்ன? 0

🕔6.Jan 2022

– மரைக்கார் – இந்தியப் பிரதமருக்கு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து அனுப்பவுள்ள ஆவணம் குறித்து, நேற்று இரவு (05) ஓட்டமாவடியில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண உயர்பீட உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், எந்தவித வெளிப்படைத்தன்மையான விடயங்களையும் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்வைக்கவில்லை என, உயர்பீட உறுப்பினர்கள் சிலர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தனர். குறித்த

மேலும்...
தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக ஆசாத் சாலி முறைப்பாடு: சிறை மீண்ட பின்னர், முதன்முதலாக ஊடகங்கள் முன்பாக பேசினார்

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக ஆசாத் சாலி முறைப்பாடு: சிறை மீண்ட பின்னர், முதன்முதலாக ஊடகங்கள் முன்பாக பேசினார் 0

🕔6.Jan 2022

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சில மாதங்களாக தான் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலி முறைப்பாடு செய்துள்ளார். தம்மை கைது செய்தமை தொடர்பில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு

மேலும்...
சுசிலின் கட்சி அங்கத்துவத்துக்கு ஆபத்து; ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை: செயலாளர் காரியவசம்

சுசிலின் கட்சி அங்கத்துவத்துக்கு ஆபத்து; ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை: செயலாளர் காரியவசம் 0

🕔6.Jan 2022

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவம் கேள்விக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, கட்சிக்குள் கோரிக்கை விடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார். சுசிலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமா

மேலும்...
கைவினைஞர்களுக்கான போட்டியில் தெரிவானவர்களுக்கு கௌரவிப்பு

கைவினைஞர்களுக்கான போட்டியில் தெரிவானவர்களுக்கு கௌரவிப்பு 0

🕔6.Jan 2022

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாணத்திலுள்ள கைவினைஞர்களுக்கான ‘ஷில்பா அபிமானி’ மாகாண கைவினைப் போட்டி 2021இல், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பல்வேறு வகையான தயாரிப்புக்களை வழங்கியவர்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட கைவினைஞர்களுக்கான கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (05) கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தில் இடம்பெற்றது. தேசிய கைவினைப் பேரவையினால் நடத்தப்பட்ட

மேலும்...
துபாய் நிறுவனத்தின் 2020 கோடி ரூபாவை நிராகரித்தது இலங்கை

துபாய் நிறுவனத்தின் 2020 கோடி ரூபாவை நிராகரித்தது இலங்கை 0

🕔6.Jan 2022

‘ஆசிய ராணி’ என்று பெயரிடப்பட்டுள்ள, 310 கிலோ எடைகொண்ட இலங்கையின் நீல மாணிக்கக்கல்லினை – துபாய் நிறுவனமொன்று கொள்வனவு செய்யும் பொருட்டு வழங்குவதற்கு முன்வந்த தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹொரனை பகுதியைச் சேர்ந்த சமீல சுரங்க பன்னிலாரச்சி என்பவருக்கு சொந்தமான இந்த கல்லை, துபாய்நிறுவனமொன்று 100 மில்லியன் டொலர்களுக்கு (இலங்கைப் பெறுமதியில் 2020 கோடி ரூபா) வாங்குவதற்கு

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட கல்முனை நபர் மரணம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட கல்முனை நபர் மரணம் 0

🕔6.Jan 2022

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மரணித்தவர் கல்முனையைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொரளை பொலிஸார் – கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். சந்தேக நபர் சுகயீனம் காரணமாக கடந்த வருடம் நொவம்பர்

மேலும்...
ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு, ‘போதையற்ற   தேசத்துக்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ விருது

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு, ‘போதையற்ற தேசத்துக்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ விருது 0

🕔6.Jan 2022

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு ‘போதையற்ற தேசத்துக்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ விருது அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி ‘போதையற்ற தேசத்துக்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ எனும் விருது, புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளது. புகையிலை, புகைபிடித்தல் மற்றும் மதுசாரம் தொடர்பில் அச்சு, இலத்திரனியல் மற்றும் இணையத்தள ஊடகங்கள் ஊடாக, மக்கள் மத்தியில்

மேலும்...
ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் வெளியீடு

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் வெளியீடு 0

🕔6.Jan 2022

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, இந்த சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி மற்றும் ஜனவரி 03 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு

மேலும்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் தமிழ் சேவை; உறவினர்களை  அறிவிப்பாளர்களாக்க பின்வழியால் முயற்சி: ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் தமிழ் சேவை; உறவினர்களை அறிவிப்பாளர்களாக்க பின்வழியால் முயற்சி: ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்பு 0

🕔5.Jan 2022

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் பணியாற்றும் சிலரின் உறவினர்களையும், அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் அறிவிப்பாளர்களாகச் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, ஆட்சேர்ப்புக்கான பகிரங்க விண்ணப்பம் கோரப்படாமல், விதிமுறைகளுக்கு மாறாக – தனிப்பட்ட ரீதியில் சிலர் அழைக்கப்பட்டு, அண்மையில் நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவிப்பாளர்களை ஆட்சேர்ப்புச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்