துபாய் நிறுவனத்தின் 2020 கோடி ரூபாவை நிராகரித்தது இலங்கை

🕔 January 6, 2022

‘ஆசிய ராணி’ என்று பெயரிடப்பட்டுள்ள, 310 கிலோ எடைகொண்ட இலங்கையின் நீல மாணிக்கக்கல்லினை – துபாய் நிறுவனமொன்று கொள்வனவு செய்யும் பொருட்டு வழங்குவதற்கு முன்வந்த தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஹொரனை பகுதியைச் சேர்ந்த சமீல சுரங்க பன்னிலாரச்சி என்பவருக்கு சொந்தமான இந்த கல்லை, துபாய்நிறுவனமொன்று 100 மில்லியன் டொலர்களுக்கு (இலங்கைப் பெறுமதியில் 2020 கோடி ரூபா) வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தது.

எனினும் இலங்கை அதிகாரிகளும், அந்த கல்லின் உரிமையாளர்களும் இதனை மறுத்துள்ளனர்.

பிரான்ஸில் உள்ள மாணிக்கக்கல் ஆய்வாளர் ஒருவர், இந்த கல்லின் பெறுமதி 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிட்டுள்ளதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.

எனவே தொடர்ந்தும் விலை பேரம் பேசப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்