தலைமையை மலினப்படுத்தும் வகையில் கட்சிக்குள் இருப்போரே பேசுகின்றனர்; ஹக்கீம் குற்றச்சாட்டு: மீண்டும் உடைகிறதா முஸ்லிம் காங்கிரஸ்?

தலைமையை மலினப்படுத்தும் வகையில் கட்சிக்குள் இருப்போரே பேசுகின்றனர்; ஹக்கீம் குற்றச்சாட்டு: மீண்டும் உடைகிறதா முஸ்லிம் காங்கிரஸ்? 0

🕔28.Mar 2021

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை மலினப்படுத்தும் வகையில், அந்தக் கட்சிக்குள்ளிருப்போரே, நேரடியாகப் பேசி வருவதாக கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். சம்மாந்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கெண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். கொரோனாவால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்யும் போது, அங்கிருந்து சிலர்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது: நாளை இறுதித் தீர்மானம்

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது: நாளை இறுதித் தீர்மானம் 0

🕔28.Mar 2021

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பிலான சட்ட திருத்தங்கள் குறித்து நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் – அமைச்சரவையில் முன்வைத்த இரண்டு மாற்று யோசனைகள் குறித்து கடந்த வாரத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகம்பன்பில

மேலும்...
10 லட்சம் பேருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை: அமைச்சர் டலஸ் தகவல்

10 லட்சம் பேருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை: அமைச்சர் டலஸ் தகவல் 0

🕔28.Mar 2021

நாட்டில் சுமார் ஒரு மில்லியன் பேருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் கிடையாது என அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். கம்புறுபிட்டிய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டின் மொத்த சனத்தொகையான 22 மில்லியன் பேரில் 18 மில்லியன் பேர் நாட்டில் வசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு நாட்டில் வசித்து

மேலும்...
கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவரும், தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவரும், தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔27.Mar 2021

புத்தளம் பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட மதரஸா ஒன்றில் சேவையாற்றிய இரண்டு ஆசிரியர்கள் நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்படி

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்:  ஜனாதிபதிக்கு மூன்று பெயர்கள் சிபாரிசு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்: ஜனாதிபதிக்கு மூன்று பெயர்கள் சிபாரிசு 0

🕔27.Mar 2021

– நூருள் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக மூன்று விண்ணப்பதாரிகளை ஜனாதிபதிக்கு பல்கலைக்கழகத்தின் பேரவை சிபாரிசு செய்துள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தரை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் 07 பேராசிரியர்கள் மற்றும் 04 கலாநிதிகள் உள்ளிட்ட 11 பேர் அப் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்காக

மேலும்...
ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது

ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது 0

🕔26.Mar 2021

மதரஸா பாடசாலையில் கற்கும் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாகக் கூறப்படும் மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட மா அதிபர் டப்புல டி லிவேரா வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளது. மேற்படி இரண்டு ஆசிரியர்களையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்ததாக சட்ட மா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன

மேலும்...
ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் வியக்க மறியல்

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் வியக்க மறியல் 0

🕔26.Mar 2021

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் எழு பேரும் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபாய்க்கும்

மேலும்...
சுதந்திரக் கட்சிக்கு அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டுகிறது: தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சிக்கு அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டுகிறது: தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு 0

🕔26.Mar 2021

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டி வருவதாக அந்தக் கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அதன் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற பின்னர் ஊடகங்களிடம் பேசிய போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “கட்சியின் உப செயலாளர்களாக

மேலும்...
நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிட அதிக செலவாகிறது; சபையில் சபாநாயகர் தெரிவிப்பு: மாற்று வழி குறித்தும் அறிவிப்பு

நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிட அதிக செலவாகிறது; சபையில் சபாநாயகர் தெரிவிப்பு: மாற்று வழி குறித்தும் அறிவிப்பு 0

🕔26.Mar 2021

நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கு பெருமளவு செலவு ஏற்படுவதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை அச்சிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை மூன்று

மேலும்...
சஹ்ரானுடன் தொடர்புடையவர் மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டுகளில் இருவர் கைது

சஹ்ரானுடன் தொடர்புடையவர் மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டுகளில் இருவர் கைது 0

🕔26.Mar 2021

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர் மாத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது, மாத்தளை பகுதியில் வைத்து கைது

மேலும்...
புர்காவை மூன்று முஸ்லிம் நாடுகள் தடை செய்துள்ளன; நாமும் கலந்துரையாடி வருகின்றோம்: அமைச்சர் கெஹலிய

புர்காவை மூன்று முஸ்லிம் நாடுகள் தடை செய்துள்ளன; நாமும் கலந்துரையாடி வருகின்றோம்: அமைச்சர் கெஹலிய 0

🕔25.Mar 2021

உலகில் புர்காவை 16 நாடுகள் தடைசெய்துள்ளதாகவும், அவற்றில் முஸ்லிம் நாடுகள் 03 உள்ளன என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். புர்கா தடை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது என்றும், புத்கா தடை தொடர்பில் இலங்கையில் மாத்திரம் மாயாஜால தீர்மானங்கள் எடுக்கப்படுவதைப் போன்று சித்திரிக்க முனைகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்

மேலும்...
இலங்கையைக் கண்காணிக்க 12 பேர் கொண்ட குழுவை நியமிக்க தீர்மானம்

இலங்கையைக் கண்காணிக்க 12 பேர் கொண்ட குழுவை நியமிக்க தீர்மானம் 0

🕔25.Mar 2021

இலங்கையை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு 12 பேர் அடங்கிய பணிக்குழாம் ஒன்றை அமைக்கவுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இலங்கையில், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும் ஊக்குவித்தல் தொடர்பான தீர்மானம், கடந்த 23’ம் திகதி மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் அமுலாக்கத்தின் அடிப்படையிலான

மேலும்...
தங்க முகக் கவசம்; 03 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய சீனர்கள்: வியக்கும் கண்டுபிடிப்பு

தங்க முகக் கவசம்; 03 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய சீனர்கள்: வியக்கும் கண்டுபிடிப்பு 0

🕔24.Mar 2021

சீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய – தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் இந்த தங்க முகக் கவசம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் உள்ள சான்ஷிங்துய் தொல்லியல் தலத்தில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 500 வெண்கலக் கால தொல்

மேலும்...
அதிக கடன்களைக் கொண்ட இரண்டாவது நாடாக இலங்கை: நாடாளுமன்றில் கபீர் ஹாசிம் தகவல்

அதிக கடன்களைக் கொண்ட இரண்டாவது நாடாக இலங்கை: நாடாளுமன்றில் கபீர் ஹாசிம் தகவல் 0

🕔24.Mar 2021

உலகில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது எனவும், கடன் நெருக்கடிகளை அரசாங்கம் மறைத்து மக்களை ஏமாற்றுகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றஞ் சாட்டியுள்ளார். பங்களாதேஷ் நாட்டிடம் கடன் கேட்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளமை மிக மோசமான நிலைமையாகும்

மேலும்...
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி 0

🕔24.Mar 2021

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘Sputnik V’ கொவிட் தடுப்பூசி 07 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடாக இலங்கை மக்கள் தொகையில் 14 மில்லியன் பேருக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. கடந்த தினம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்