புர்காவை மூன்று முஸ்லிம் நாடுகள் தடை செய்துள்ளன; நாமும் கலந்துரையாடி வருகின்றோம்: அமைச்சர் கெஹலிய

🕔 March 25, 2021

லகில் புர்காவை 16 நாடுகள் தடைசெய்துள்ளதாகவும், அவற்றில் முஸ்லிம் நாடுகள் 03 உள்ளன என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

புர்கா தடை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது என்றும், புத்கா தடை தொடர்பில் இலங்கையில் மாத்திரம் மாயாஜால தீர்மானங்கள் எடுக்கப்படுவதைப் போன்று சித்திரிக்க முனைகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெவிக்கையில்;

“16 நாடுகள் தற்போது வரை புர்காவை தடை செய்துள்ளன. ஐந்து நட்சத்திர ஜனநாயக நாடுகளான சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளும் தடை செய்துள்ளன. அதற்கு பல்வேறு பாதுகாப்பு காரணங்கள் உள்ளன.

அந்த 16 நாடுகளில் முஸ்லிம் நாடுகள் மூன்றும் உள்ளன என்பதை மறக்கவேண்டாம்.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்காகவும் மக்களின் பாதுகாப்புக்காகவும் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து எதிர்காலத்தில் அறிவிப்போம்” என்றார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று கலந்து கொண்ட போது, அவர் இந்த விடயங்களைக் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்