ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது

🕔 March 26, 2021

தரஸா பாடசாலையில் கற்கும் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாகக் கூறப்படும் மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட மா அதிபர் டப்புல டி லிவேரா வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளது.

மேற்படி இரண்டு ஆசிரியர்களையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்ததாக சட்ட மா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

புத்தளத்திலுள்ள மதரஸா பாடசாலை ஒன்றின் ஆசிரியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 2000க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் உள்ளன என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

தேசிய கல்விக் கொள்கையை மீறும் மதரஸாக்கள் தடைசெய்யப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

முஸ்லிம் அமைப்புக்கள் தன்னுடைய இந்த முடிவுக்கு ஆதரவளித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வகையில் 1000க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் தடைசெய்யப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

(கொழும்பு கஸட்)

Comments