ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் வியக்க மறியல்

🕔 March 26, 2021

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் எழு பேரும் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பிணை முறிகளை தவறாக பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் அடிப்படையில் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மேற்படி சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு, மேற்படி நீதிபதிகள் குழாம் கடந்த 17ஆம் திகதியன்று உத்தரவிட்டிருந்தது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2016ஆம் ஆண்டு இந்த மோசடி இடம்பெற்றிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்