தொழில் பெறும் பட்டதாரிகள் விவரம்: இணையத்தில் வெளியீடு

தொழில் பெறும் பட்டதாரிகள் விவரம்: இணையத்தில் வெளியீடு 0

🕔17.Aug 2020

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் நாட்களில், குறித்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஏற்கனவே அறித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் கீழ் நியமனம் பெறுபவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி அருகிலுள்ள

மேலும்...
ஐ.தே.கட்சி தலைமைத்துவத்தில் மாகாண சபைத் தேர்தல் வரை, ரணில் இருப்பார்: செயலாளர் தெரிவிப்பு

ஐ.தே.கட்சி தலைமைத்துவத்தில் மாகாண சபைத் தேர்தல் வரை, ரணில் இருப்பார்: செயலாளர் தெரிவிப்பு 0

🕔16.Aug 2020

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர்தான், தனது பதவியில் இருந்து விலகுவார் என, கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் கரியவாசம் ரெிவித்துள்ளார். நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன், கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற சந்திப்பின்போதே, ரணில் விக்ரமசிங்க இந்த நிலைப்பாட்டை

மேலும்...
கோலியாத்தை வென்ற தாவீது: நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர்

கோலியாத்தை வென்ற தாவீது: நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் 0

🕔16.Aug 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஊடகவியலாளர் ஒருவர் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் முஷாரப் முதுநபீன். வயது 37, சொந்த ஊர் பொத்துவில். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான ஜனாதிபதி விருது வென்றுள்ள இவர், ஒரு சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் 0

🕔16.Aug 2020

பல்கலைக்கழகங்கள் அனைத்தும், வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திங்கட்கிழமை முதல் திறக்கப்படவுள்ளன. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய, பல்கலைக்கழக நடவடிக்கைகள் யாவும் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாளை முதல் அனைத்து பீடங்களினதும் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார். பின்பற்றப்பட வேண்டிய

மேலும்...
அஸாத் சாலிக்கு ஆப்பு வைத்த சஜித்: ஏமாற்றத்தின் இரண்டாம் பாகம்

அஸாத் சாலிக்கு ஆப்பு வைத்த சஜித்: ஏமாற்றத்தின் இரண்டாம் பாகம் 0

🕔14.Aug 2020

– அஸீஸ் நிஸாருத்தீன் – சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அஸாத் சாலியை நியமிக்காத விவகாரம் தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது. சஜித் பிரேமதாஸ தனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்று அஸாத் சாலி கூறியுள்ளார். சமூக வலைத்தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்தை முன் வைத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்

மேலும்...
ஐ.தே.கட்சி தலைவர் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு

ஐ.தே.கட்சி தலைவர் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு 0

🕔14.Aug 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மேலும் மூவரின் பெயர் பரிந்துரைக்கப்படடுள்ளதாகத் தெரியவருகிறது. அந்த வகையில் மொத்தமாக 07 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கட்சியின் செயற்குழுவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கட்சிக்கு புதிய மற்றும் இளம் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான

மேலும்...
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும், பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும், பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம் 0

🕔14.Aug 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, அவர் சிகிச்சைபெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கோவிட் – 19 அறிகுறிகளுடன் கடந்த 05ஆம் திகதியன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில்,13ஆம் திகதி இரவு

மேலும்...
ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு?

ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு? 0

🕔13.Aug 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – புதிய அரசாங்கத்துக்குரிய அமைச்சர்கள் நேற்று நியமிக்கப்பட்ட நிலையில், ‘பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி கோட்டபாபய ராஜபக்ஷ தன்வசம் வைத்திருப்பார்’ என, அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வின் போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அரசியலமைப்பில் 19வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்குப் பின்னர், ஜனாதிபதியொருவர் அமைச்சுப் பதவியொன்றை தன்வசம்

மேலும்...
தேசியப்பட்டியல் விவகாரம்: சஜித் துரோகமிழைத்து விட்டார்: மு.கா. பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் விசனம்

தேசியப்பட்டியல் விவகாரம்: சஜித் துரோகமிழைத்து விட்டார்: மு.கா. பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் விசனம் 0

🕔13.Aug 2020

பொதுத் தேர்தலில் இணங்கப்பட்ட தேர்தல் உடன்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை உதாசீனப்படுத்துவது, அதன் பங்காளிக் கட்சிகளுடனான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துமென மு.கா வின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர் மேலும் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்துக்குரித்தான தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவங்களை வழங்க மறுக்கும் சஜித் பிரேமதாஸவின்

மேலும்...
சிறுபான்மையினரின் பாதுகாப்பை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்தினால்: அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும்

சிறுபான்மையினரின் பாதுகாப்பை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்தினால்: அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும் 0

🕔13.Aug 2020

– முன்ஸிப் அஹமட் – “தேர்தலில் நான் களமிறங்குவதற்கு முன்னர்; தேர்தலுக்காக செலவு செய்ய கோடிக்கணக்கான பணம் வேண்டும் என்றும் போதைப் பொருள் கொடுக்க வேண்டும் எனவும் பிழையாக எனக்கு வழிகாட்டப்பட்டது. ஆனால், அவ்வாறான வழிகாட்டல்களைப் புறந்தள்ளி நேர்மையான அரசியலைச் செய்த போது, மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...
‘மாற்றம் மேற்கொள்ள வேண்டாம்’: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

‘மாற்றம் மேற்கொள்ள வேண்டாம்’: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு 0

🕔13.Aug 2020

கூட்டுதாபனங்கள், சபைகள், அரசியல் அமைப்புச் சபை ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார். சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் இது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அறிவித்துள்ளார். அரச கூட்டுதாபனங்கள், சபைகள், அரசியல் அமைப்புச் சபை ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும்

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தயார்;  சிறுபான்மை கட்சிகளுக்கு இடமில்லை

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தயார்; சிறுபான்மை கட்சிகளுக்கு இடமில்லை 0

🕔13.Aug 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் தயாரிக்கப்பட்டு விட்டதாக, அந்தக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அந்தப்பட்டியலில் சிறுபான்மை கட்சியினருக்கு எவ்வித இடமும் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தயாரித்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வருமாறு; 01) ரஞ்சித் மத்தும பண்டா02) இம்தியாஸ் பாக்கீர்

மேலும்...
ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு அமைச்சுப் பொறுப்புக்கள்

ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் 0

🕔12.Aug 2020

– அஹமட் – ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர், இன்றைய தினம் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பெடுத்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி, புத்தசாசனம் – மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின்

மேலும்...
மைத்திரி, அதாஉல்லா உள்ளிட்ட முக்கியஷ்தர்கள் பலருக்கு அமைச்சர் பதவிகள் இல்லை

மைத்திரி, அதாஉல்லா உள்ளிட்ட முக்கியஷ்தர்கள் பலருக்கு அமைச்சர் பதவிகள் இல்லை 0

🕔12.Aug 2020

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்ட போதும், அரசாங்கத்தின் முக்கியஷ்தர்கள் பலருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படாமை குறித்து பரவலான பேச்சுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்தவித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை. பொலநறுவை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை மைத்திரி இம்முறை பெற்றுக்

மேலும்...
26 அமைச்சர்கள், 39 ராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமனம்

26 அமைச்சர்கள், 39 ராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமனம் 0

🕔12.Aug 2020

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டனர். இன்று புதன்கிழமை முற்பகல் கண்டி மகுல் மடுவவில் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். 26 அமைச்சர்களும், 39 ராஜாங்க அமைச்சர்களும் இதன்போது நியமிக்கப்பட்டனர். அதன் விவரம் வருமாறு; அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்