ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தயார்; சிறுபான்மை கட்சிகளுக்கு இடமில்லை

🕔 August 13, 2020

க்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் தயாரிக்கப்பட்டு விட்டதாக, அந்தக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அந்தப்பட்டியலில் சிறுபான்மை கட்சியினருக்கு எவ்வித இடமும் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தயாரித்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வருமாறு;

01) ரஞ்சித் மத்தும பண்டா
02) இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
03) திஸ்ஸ அத்தநாயக்க
04) ஹரீன் பெனாண்டோ
05) மயந்த திஸாநாயக்க
06) எரான் விக்ரமரட்ன
07) டயனா கமகே

ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கும் தேசியப்பட்டியலில் தலா ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதென பங்காளிக் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றுக்கு ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, தற்போது அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Comments