ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு அமைச்சுப் பொறுப்புக்கள்

🕔 August 12, 2020

– அஹமட் –

ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர், இன்றைய தினம் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி, புத்தசாசனம் – மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ – இளைஞர் விவகார, விளையாட்டுதுறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷவும் அமைச்சரவை அந்தஷ்துள்ள மற்றும் ராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

சமல் ராஜபக்ஷவின் மகன் சசிந்திர ராஜபக்ஷவும் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவை தவிர, மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியின் மகன் நிபுண ரணவக்க – மாத்தளை மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழுத் தலைவராக, இன்று நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments