முன்னர் அறிவிக்கப்பட்ட படி, ஊரடங்கு நாளை தளர்த்தப்படாது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு

முன்னர் அறிவிக்கப்பட்ட படி, ஊரடங்கு நாளை தளர்த்தப்படாது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔26.Apr 2020

ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை நாட்டின் அநேகமான மாவட்டங்களில் தளர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்கிழமைதான் ஊரடங்கு தளர்த்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் உள்ள அனைத்து முப்படையினரும் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் – அவர்கள் தமது பணியிடங்களுக்கு உடனடியாகத் திரும்புவதற்கு ஏதுவான முறையில் – நாளை, திங்கள், நாடு தழுவிய

மேலும்...
ஊடக சுதந்திரத்தில் உகண்டா, சிம்பாவே நாடுகளை விடவும் இலங்கை பின்னடைவு: 127ஆவது இடத்துக்கு வீழ்ந்தது

ஊடக சுதந்திரத்தில் உகண்டா, சிம்பாவே நாடுகளை விடவும் இலங்கை பின்னடைவு: 127ஆவது இடத்துக்கு வீழ்ந்தது 0

🕔26.Apr 2020

– முன்ஸிப் அஹமட் – ஊடக சுதந்திரமுள்ள நாடுகளின் வரிசையில் – சர்வதேச ரீதியாக இலங்கை 127ஆ இடத்துக்கு இவ்வருடம் தள்ளப்பட்டுள்ளது. ‘எல்லைகளற்ற ஊடவியலாளர் அமைப்பு’ மேற்கொண்ட தரப்படுத்தலுக்கு அமைய, 2020ஆம் ஆண்டில் மேற்படி இடம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது. 180 நாடுகள் இந்தத் தரப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் நோர்வே முதலாம் இடத்தையும், பின்லாந்து இரண்டாம் இடத்தையும்,

மேலும்...
வெலிசர கடற்படை வைத்தியசாலையில் உயிரிழந்த அதிகாரிக்கு எலிக் காய்ச்சல்; கொரோனா இல்லை: அறிக்கையில் தெரிவிப்பு

வெலிசர கடற்படை வைத்தியசாலையில் உயிரிழந்த அதிகாரிக்கு எலிக் காய்ச்சல்; கொரோனா இல்லை: அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔26.Apr 2020

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்த கடற்படை இளம் அதிகாரி, எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் என, கடற்படை தெரிவித்துள்ளது. ஆயினும், இந்த அதிகாரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், இவரின் மரணம் தொடர்பில் கடற்படை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த

மேலும்...
வடகொரியத் தலைவர் எங்கே; வாட்சன் நகரில் நிறுத்தப்பட்டிருக்கும் ரயில் அவருடையதா?

வடகொரியத் தலைவர் எங்கே; வாட்சன் நகரில் நிறுத்தப்பட்டிருக்கும் ரயில் அவருடையதா? 0

🕔26.Apr 2020

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல்நலம் குறித்தும், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கிம் ஜாங்- உன் க்குச் சொந்தமானது என்று கருதப்படும் ரயில் ஒன்று, அந்நாட்டின் உல்லாச நகரம் என்று கூறப்படும் வான்சன் நகரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வாஷிங்டனில் இருந்து இயங்கும்

மேலும்...
சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோரை, கட்சியிலிருந்து நீக்க ஐ.தே.க தீர்மானம்

சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோரை, கட்சியிலிருந்து நீக்க ஐ.தே.க தீர்மானம் 0

🕔26.Apr 2020

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அனைவரையும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தற்போது வேறு கட்சிகளில்

மேலும்...
அட்டாளைச்சேனை மடுவத்தில் சுகாதாரம் இல்லை; இழுத்து மூட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உத்தரவு

அட்டாளைச்சேனை மடுவத்தில் சுகாதாரம் இல்லை; இழுத்து மூட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உத்தரவு 0

🕔26.Apr 2020

– பாறுக் ஷிஹான் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மடுவத்தில் சுகாதாரத்துக்கு முரணான வகையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதனால் அதனை உடனடியாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக  கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை குறித்த மாடறுக்கும் மடுவத்துக்கு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி  மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சகிதம் சென்று பார்வையிட்ட

மேலும்...
காத்தான்குடியில் கைத்தொலைபேசி திருடியவர் மற்றும் அதனைக் கொள்வனவு செய்த இருவருக்கும் விளக்க மறியல்

காத்தான்குடியில் கைத்தொலைபேசி திருடியவர் மற்றும் அதனைக் கொள்வனவு செய்த இருவருக்கும் விளக்க மறியல் 0

🕔26.Apr 2020

– முன்ஸிப் – காத்தான்குடியில் மதரஸா கட்டட நிர்மாண வேலைகள் நடக்கும் இடமொன்றில் நுழைந்து பெறுமதியான கைத் தொலைபேசி மற்றும் பணம் உள்ளிட்ட ஆவணங்கள் கொண்ட ‘பேர்ஸ்’ ஆகியவற்றை திருடிய நபரையும், அந்த நபரிடமிருந்து குறித்த கைத் தொலைபேசியை கொள்வனவு செய்த நபரையும் எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு

மேலும்...
கொரோனா நோயாளர் எண்ணிக்கை நாட்டில் 450 ஐ கடந்தது

கொரோனா நோயாளர் எண்ணிக்கை நாட்டில் 450 ஐ கடந்தது 0

🕔25.Apr 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் 452ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 32 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பாதிப்புக்குள்ளானவர்களில் 118 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். உலகளவில் 28 லட்சத்து 30 ஆயிரத்து 51 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 792,778 பேர் குணமடைந்த நிலையில்,

மேலும்...
அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் ஹெரோயின் வியாபாரம்: தடுத்து நிறுத்தக் கோரி, அக்கரைப்பற்று பொலிஸாருக்கு மாதர் சங்கம் கடிதம்

அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் ஹெரோயின் வியாபாரம்: தடுத்து நிறுத்தக் கோரி, அக்கரைப்பற்று பொலிஸாருக்கு மாதர் சங்கம் கடிதம் 0

🕔25.Apr 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் தூள் (ஹெரோயின்) போதைப்பொருள் விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அங்குள்ள பொதுமக்கள் பல்வேறுபட்ட இன்னல்கள் மற்றும் அசௌகரியங்களுக்கு ஆளாகி வருவதாகவும், அந்தப் பகுதியிலுள்ள மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எழுத்து மூலம் முறையிட்டுள்ளனர். இதேவேளை, குறித்த போதைப்பொருள் வியாபாரம்

மேலும்...
இரண்டாவது தடவை கொரோனா தாக்காது என்பதற்கு, எந்தவித உத்தரவாதமும் இல்லை: உலக சுகாதார ஸ்தாபனம்

இரண்டாவது தடவை கொரோனா தாக்காது என்பதற்கு, எந்தவித உத்தரவாதமும் இல்லை: உலக சுகாதார ஸ்தாபனம் 0

🕔25.Apr 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடைந்த பின்னர், மீண்டும் அந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி மீண்டவர்களின் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பொருட்கள் (antibodies) உண்டாகும் என்பதற்கும், அவர்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்குள்ளாக

மேலும்...
சாட்டை மற்றும் பிரம்படித் தண்டனையை கைவிட, சௌதி அரேபியா தீர்மானம்

சாட்டை மற்றும் பிரம்படித் தண்டனையை கைவிட, சௌதி அரேபியா தீர்மானம் 0

🕔25.Apr 2020

சாட்டை மற்றும் பிரம்பால் அடித்து தண்டனை வழங்கப்படும் முறையை சௌதி அரேபிய அரசு கைவிட உள்ளதாக அந்த நாட்டின் சட்ட ஆவணம் ஒன்றை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாட்டை மற்றும் பிரம்பால் அடிப்பதற்கு பதிலாக சிறை அல்லது அபராதம் விதிக்கலாம் என்று சௌதி அரேபிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும்...
ஜா-எல பகுதி நாய்க்கு கொரோனா: செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

ஜா-எல பகுதி நாய்க்கு கொரோனா: செய்தியின் உண்மைத்தன்மை என்ன? 0

🕔25.Apr 2020

கொரோனா தொற்றால் நாயொன்று பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே.கே. சரத் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்ட ஜா-எல -சுதுவெல பகுதியில் உள்ள நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தியொன்று வெளியானது. இதில் எந்தவித உண்மையும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது ஆபத்தானது: கஃபே

நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது ஆபத்தானது: கஃபே 0

🕔25.Apr 2020

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது என கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது. தபால் மூல விண்ணப்பங்கள் பலரின் கைகளின் ஊடாக பறிமாற்றப்படுவதாகவும் அவ்வாறு பறிமாற்றம் இடம்பெறும் போது ஒருவருக்காவது கொரோனா தொற்று இருக்க கூடும் எனவும் அவரின் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும்...
நாட்டில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவு

நாட்டில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவு 0

🕔24.Apr 2020

நாட்டில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக, இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மட்டும் (இரவு 08:04 வரை) 48 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் நாட்டில் இதுவரை 416 பேர், கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் இவர்களில் 109 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
அம்பாறை மாவட்டத்தின் நான்கு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

அம்பாறை மாவட்டத்தின் நான்கு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன 0

🕔24.Apr 2020

அம்பாறை மாவட்டத்தின் 04 பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வௌியேறுவதற்கும் பொலிஸார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். உஹன, தமன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் ரஜவெவ, மடவலலந்த, பஹலலந்த மற்றும் நவகிரியாவ ஆகிய பகுதிகளுக்கே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கு அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளிலிருந்து வௌியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெலிசர கடற்படையினர் இங்கு நடமாடியமையினை அடுத்து,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்