தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க 0

🕔18.Aug 2019

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவர் அநுர குமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் மேலும் 28 அமைப்புகளை ஒற்றிணைத்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யினால் இந்த பேரணியும் பொதுக்கூட்டமும் காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைய கூட்டத்தின்

மேலும்...
நிந்தவூர் கடலரிப்பு: தற்காலிக தீர்வு வழங்குவதாகக் கூறியவர்கள் எங்கே?

நிந்தவூர் கடலரிப்பு: தற்காலிக தீர்வு வழங்குவதாகக் கூறியவர்கள் எங்கே? 0

🕔18.Aug 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருகின்றது. இதனைத் தடுக்க இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நிரந்தரமாக கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும்  தற்போது தற்காலிகமாக கடல் அரிப்பை தடுக்க கடற்கரை

மேலும்...
ராணுவத் தளபதியின் பதவிக் காலம், நாளை நிறைவு

ராணுவத் தளபதியின் பதவிக் காலம், நாளை நிறைவு 0

🕔17.Aug 2019

ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. எனவே நாளை அவர் ஓய்வுபெறுவார் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதும் அவரின் பதவிக்காலத்தை நீடிப்பதா அல்லது அவர் ஓய்வு பெறுவதா என்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் ஒரு வருட காலத்துக்கு,

மேலும்...
நிச்சயமாகப் போட்டியிடுவேன்: சஜித் உறுதிபட தெரிவிப்பு

நிச்சயமாகப் போட்டியிடுவேன்: சஜித் உறுதிபட தெரிவிப்பு 0

🕔17.Aug 2019

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக தான் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதிபடத் தெரிவித்துள்ளார். அம்பலன்தொட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். “எதிர்வரும் சில மாதங்களில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. பலர் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். எனினும் இந்த தேர்தலில் நான்

மேலும்...
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், பெண்களுக்கு அநீதியாக உள்ளது: பைஸர் முஸ்தபா

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், பெண்களுக்கு அநீதியாக உள்ளது: பைஸர் முஸ்தபா 0

🕔17.Aug 2019

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவி்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனை அவர் கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; “சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள், காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். மலேசியா,

மேலும்...
ஆய்வுப் பணியின் நிமித்தம், தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி றமீஸ், இங்கிலாந்து பயணம்

ஆய்வுப் பணியின் நிமித்தம், தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி றமீஸ், இங்கிலாந்து பயணம் 0

🕔17.Aug 2019

– எம்.வை. அமீர்- தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தனது சமூக ஆய்வு விடயமாக நாளை ஞாயிற்றுக்கிழமை  இங்கிலாந்து பயணமாகிறார். இங்கிலாந்து நெபியார் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆய்வு போட்டி நிதியை வென்றதன் மூலம் ‘கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் சமூக பொருளாதார வலுவூட்டல்’ என்ற சமூக ஆய்வை, இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரோடு

மேலும்...
யாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம்

யாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம் 0

🕔16.Aug 2019

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்திலேயே இந்த அங்கிகாரம் வழங்கப் பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட்பதியுதீன் கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டது. இதற்கெனத் தனியார் காணிகள் கொள்வனவு

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா: 30ஆம் திகதிக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் அறிவிக்கும்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா: 30ஆம் திகதிக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் 0

🕔15.Aug 2019

விகிதாசார தேர்தல் முறைமையின் ஊடாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரியுள்ளார். இது தொடர்பில் ஆராய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நியமித்துள்ளார். பிரதம நீதியரசர் உள்ளிட்ளோர் அடங்கிய இந்தக் குழு முன்னிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி

மேலும்...
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக,  அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக, அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட் 0

🕔15.Aug 2019

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார்.வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் நேற்று புதன்கிழமை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது, இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.

மேலும்...
மொழிக் கொள்கையை மீறும் கல்வியமைச்சு: கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விசனம்

மொழிக் கொள்கையை மீறும் கல்வியமைச்சு: கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விசனம் 0

🕔15.Aug 2019

– அஸ்லம் எஸ்.மௌலானா – இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்துக்கு பதவியுயர்வு வழங்குவதற்காக கல்வி அமைச்சினால் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் மற்றும் விவரம் கோரும் படிவம் என்பன தனிச்சிங்களத்தில் அமைந்திருப்பதாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விசனம் தெரிவித்துள்ளது. இம்மொழிப்புறக்கணிப்பானது அரசாங்கத்தின் தேசிய

மேலும்...
இறக்காமம் பிரதேச சபை கூட்ட அமர்வுகளில் செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை

இறக்காமம் பிரதேச சபை கூட்ட அமர்வுகளில் செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை 0

🕔15.Aug 2019

– அஹமட் – இறக்காமம் பிரதேச சபையின் கூட்ட அமர்வுகளுக்கு செய்தி சேகரிக்கும் பொருட்டு, ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஊடகவியலாளர்கள் அமர்வதற்குரிய ஒழுங்குகளும் அங்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் பங்கேற்கும் சபைக் கூட்டங்களில் என்ன பேசுகிறார்கள் என்பதை, வெளியுலகுக்குத் தெரியப்படுத்துதல் அவசியமாகும். வாக்களித்த மக்களும் அதனையே எதிர்பார்கின்றனர்.

மேலும்...
கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை ரத்தாகவில்லையா: அமெரிக்கா வெளியிட்ட பட்டியலால் குழப்பம்

கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை ரத்தாகவில்லையா: அமெரிக்கா வெளியிட்ட பட்டியலால் குழப்பம் 0

🕔15.Aug 2019

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை. 2019ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (மார்ச் 01 தொடக்கம், ஜூன் 30 வரை) அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலை, அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உத்தியோகபூர்வமாக நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர்

மேலும்...
காஷ்மீர் பயங்கரவாதிகளின் தாய் வீடாகி விட்டது – நடிகர் ரஜினிகாந்த்

காஷ்மீர் பயங்கரவாதிகளின் தாய் வீடாகி விட்டது – நடிகர் ரஜினிகாந்த் 0

🕔14.Aug 2019

காஷ்மீர் பிராந்தியமானது பயங்கரவாதிகள், தீவிரவாதிகளின் தாய்வீடாக இருப்பதாகவும், அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ நுழைவாயில்போல இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் அவரது வீட்டுக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாகக் கூறினார். மேலும். சென்னையில் புத்தக வெளியீட்டு விழா

மேலும்...
அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார்

அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார் 0

🕔13.Aug 2019

அம்­பா­றையில் 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்­செ­யல்­களில் பாதிக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் சொத்­துளுக்கு நஷ்­ட­ஈடு வழங்குவதற்காக வேண்டி முதற்­கட்­ட­மாக 10 மில்­லியன் ரூபா திறை­சேரி மூலம் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளதாக புனர்­வாழ்வு அமைச்சின் இழப்­பீட்டு பணியகத்தின் உதவிப் பணிப்­பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரி­வித்தார். இந்த நஷ்­ட­ஈடு முதற்­ கட்­ட­மாக

மேலும்...
முஸ்லிம்களை அடக்கியாளும், த.தே.கூட்டமைப்பின் அரசியல்: சுமந்திரனின் களுவாஞ்சிகுடி உரை குறித்த அலசல்

முஸ்லிம்களை அடக்கியாளும், த.தே.கூட்டமைப்பின் அரசியல்: சுமந்திரனின் களுவாஞ்சிகுடி உரை குறித்த அலசல் 0

🕔13.Aug 2019

– வை எல் எஸ் ஹமீட் – கல்முனைத் தமிழ் பிரதேச செயலகம் சம்பந்தமாகவும் தோப்பூர் பிரதேச செயலககம் சம்பந்தமாகவும், நேற்று திங்கட்கிழமை களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் சில விடயங்களைத் தெரிவித்துள்ளார். அவை முஸ்லிம் சமூகத்துக்கு பல செய்திகளைச் சொல்கின்றன. அவர் கூறிய சில முக்கிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்