ராணுவத் தளபதியின் பதவிக் காலம், நாளை நிறைவு

🕔 August 17, 2019

ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது.

எனவே நாளை அவர் ஓய்வுபெறுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதும் அவரின் பதவிக்காலத்தை நீடிப்பதா அல்லது அவர் ஓய்வு பெறுவதா என்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் ஒரு வருட காலத்துக்கு, ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி நீடிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்