பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா: 30ஆம் திகதிக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் அறிவிக்கும்
விகிதாசார தேர்தல் முறைமையின் ஊடாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் ஆராய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நியமித்துள்ளார்.
பிரதம நீதியரசர் உள்ளிட்ளோர் அடங்கிய இந்தக் குழு முன்னிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள ஆவணம் ஆராயப்படவுள்ளது.
விகிதாசார தேர்தல் சட்டத்தின் கீழ், மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பில் இதன்போது ஆராயப்படும்.
இது தொடர்பான முடிவை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் அனுப்பி வைக்கும்.
கலப்பு முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், அதற்கான எல்லை நிர்ணயம் இதுவரை நடத்தி முடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.