Back to homepage

மேல் மாகாணம்

இலத்திரனியல் வர்த்தகம் தொடர்பிலான சட்டவரைபு, நுகர்வோரை பாதுகாக்க வழிவகுக்கும்: றிசாட்

இலத்திரனியல் வர்த்தகம் தொடர்பிலான சட்டவரைபு, நுகர்வோரை பாதுகாக்க வழிவகுக்கும்: றிசாட் 0

🕔11.Sep 2018

இலத்திரனியல் வர்த்தகத்தில் நமது நாட்டின் நுகர்வோருக்கான பாதுகாப்பை சட்டரீதியாக உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலத்திரனியல் வர்த்தகத்தில் நுகர்வோருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்ட வரைபை உருவாக்குவது தொடர்பில், அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற இரண்டு நாள் வேலைப்பட்டறையின் அங்குரார்ப்பண நிகழ்வில்

மேலும்...
அரச பணத்தை தந்தைக்கு செலவிட்ட குற்றச்சாட்டு: கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லவும் தடை

அரச பணத்தை தந்தைக்கு செலவிட்ட குற்றச்சாட்டு: கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லவும் தடை 0

🕔10.Sep 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டா உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதோடு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 4.8 கோடி ரூபா பணத்தை மோசடி

மேலும்...
ஞானசார தேரர்: வைத்தியசாலையில் இருந்து, மீண்டும் சிறைச்சாலைக்கு

ஞானசார தேரர்: வைத்தியசாலையில் இருந்து, மீண்டும் சிறைச்சாலைக்கு 0

🕔9.Sep 2018

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். இவர் மூன்று தடவை இவ்வாறு வைத்தியசாலையிலிருந்து மாற்றபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டில் 06 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சில நாட்களில் – ஞானசார தேரருக்கு ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில்

மேலும்...
மூன்று வருட விசாரணைகளின் பின்னர், கோட்டாவுக்கு எதிராக வழக்கு

மூன்று வருட விசாரணைகளின் பின்னர், கோட்டாவுக்கு எதிராக வழக்கு 0

🕔9.Sep 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நாளை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. மூன்று வருட விசாரணைகளின் பின்னர், இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது 40 மில்லியன் ரூபா அரச நிதியை பயன்படுத்தி, 2013ஆம் ஆண்டு தன்னுடை தந்தையான டி.ஏ. ராஜபக்ஷவுக்கு நினைவில்லம் அமைத்த குற்றச்சாட்டின்பேரிலேயே இந்த

மேலும்...
02 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதியுடைய தங்கக் கடத்தல் முறியறிப்பு

02 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதியுடைய தங்கக் கடத்தல் முறியறிப்பு 0

🕔9.Sep 2018

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த விமானப் பயணி ஒருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதானார். இலங்கையைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். இலங்கையைச் சேர்ந்த இவர், இன்று காலை 08.30 மணியளவில் இந்தியாவில் இருந்து விமானம் மூலம் வந்துள்ளார்.

மேலும்...
பாக்கிஸ்தான் பல்கலைக்கழகங்களில், இலங்கை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குமாறு, அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

பாக்கிஸ்தான் பல்கலைக்கழகங்களில், இலங்கை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குமாறு, அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔7.Sep 2018

பாகிஸ்தானிய புதிய அரசாங்கத்தின் உருவாக்கத்தில் அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களினதும், இளைஞர்களினதும் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது எனவும், பிரதமர் இம்ரான்கானின் அரசாங்கத்தின் புதிய கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இவ்விரு சாராரும் உத்வேகம் காட்டுவதாகவும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கலாநிதி ஹசன் சொஹைப் முராத் தெரிவித்தார். லாஹூரிலுள்ள முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஐ.எல்.எம் நம்பிக்கை நிதியத்தின் (ILM

மேலும்...
ஒரு பாலினச் சேர்க்கைக்கு ஆதரவளிக்கும் தீர்ப்புக்கு, அமைச்சர் மங்கள வரவேற்பு

ஒரு பாலினச் சேர்க்கைக்கு ஆதரவளிக்கும் தீர்ப்புக்கு, அமைச்சர் மங்கள வரவேற்பு 0

🕔7.Sep 2018

– மப்றூக் – ஓரு பாலுறவில் ஈடுபடுவது குற்றமல்ல என்று, இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமையினை, இலங்கையின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றுள்ளதோடு, இந்தியாவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் காலத்திலிருந்து 150 வருடங்களுக்கும் மேலாக, இந்திய குற்றவியல் சட்டத்தின்படி, ஒரே பாலினத்தவர்கள் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாக இருந்து வந்தது. இந்த

மேலும்...
ரவிக்கு அமைச்சுப் பதவி வழங்க, ஐ.தே.க. அரசியல் பீடம் தீர்மானம்

ரவிக்கு அமைச்சுப் பதவி வழங்க, ஐ.தே.க. அரசியல் பீடம் தீர்மானம் 0

🕔7.Sep 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயகவுக்கு மீண்டும், அமைச்சுப் பதவியினை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டள்ளது. நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடம் கூடிப் பேசிய போது, இந்த தீர்மானம் எட்டப்பட்டது. இங்கு ரவி கருணாநாயக்க பேசும் போது; தனக்கு மீளவும் அமைச்சர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பில்லை என்று, ஜனாதிபதியிடமிருந்து தனக்கு

மேலும்...
நேற்றைய பேரணியின் அடுத்த கட்டம் கண்டியில்: மஹிந்தானந்த தெரிவிப்பு

நேற்றைய பேரணியின் அடுத்த கட்டம் கண்டியில்: மஹிந்தானந்த தெரிவிப்பு 0

🕔6.Sep 2018

ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்றைய தினம் நடத்திய, அரசாங்கத்துக்கு எதிராண பேரணியின் இரண்டாம் கட்டம், கண்டியில் இடம்பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பேரணியே இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற நீண்டதும், அதிக மக்கள் பங்கேற்றதுமான பேரணி எனவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு, இந்தத்

மேலும்...
ஞானசார தேரர், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம்

ஞானசார தேரர், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம் 0

🕔6.Sep 2018

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை மாற்றப்பட்டுள்ளார். ஞானசார தேரருக்கு 06 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் – ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சில வாரங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னர், அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் மரணம்

ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் மரணம் 0

🕔6.Sep 2018

ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று நடத்திய ‘ஜனபலய’ போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 81 பேர், மது அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 08 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய போராட்டத்தில் கலந்து

மேலும்...
நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம்

நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம் 0

🕔5.Sep 2018

உருளைக் கிழங்கு செய்கையில் ஈடுபடும் உள்நாட்டு விவசாயிகளின் அறுவடையை நியாயமான விலைக்கு சதொச ஊடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் லங்கா சதொச பெறுகை உத்தியோகத்தர்கள் உருளைக் கிழங்கு விவசாயிகளிடம் சென்று 01 கிலோ கிழங்கு 90 ரூபா வீதமும், கிழங்கு விவசாயிகளினால் லங்கா சதொசவிற்கு கொண்டு

மேலும்...
இன ரீதியான பாடசாலைகளை ஒழித்து விடுவதால், முரண்பாடுகளை இல்லாமல் செய்து விட முடியாது: ஹக்கீம்

இன ரீதியான பாடசாலைகளை ஒழித்து விடுவதால், முரண்பாடுகளை இல்லாமல் செய்து விட முடியாது: ஹக்கீம் 0

🕔5.Sep 2018

இன ரீதியான பாடசாலைகள் இருக்கவேண்டுமா, இல்லையா என்ற பிரச்சினைகள் இப்போது ஆரம்பித்துள்ளன. ஆனால், ஒரு பாடசாலையில் இன ரீதியான தனித்துவ அடையாளம் இருந்தாலும், அதில் ஏனைய இன மாணவர்களும் கற்கக்கூடிய சூழலை உருவாக்குவதுதான் காலத்தின் தேவையாகும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கொழும்பு பதியுதீன் மஹ்மூத் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டம்: ஆரம்பாகும் இடம் பற்றிய தகவல் கசிந்தது

ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டம்: ஆரம்பாகும் இடம் பற்றிய தகவல் கசிந்தது 0

🕔5.Sep 2018

‘மக்கள் பலம் கொழும்புக்கு’ என்ற தொனிப்பொருளில், அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். பெருந்திரளான மக்கள் கலந்துக்கொள்ளவுள்ள இந்த எதிர்ப்பு போராட்டம் கொழும்பில், எந்த இடத்திலிருந்து ஆரம்பமாகப்போகிறது என்பது குறித்து ஒன்றிணைந்த எதிரணியினர் தொடர்ந்தும் ரகசியம் பேணி வருகின்றனர். இந்தநிலையில் இந்த போராட்டமானது, கொழும்பு புறக்கோட்டை

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கு எதிர்பாக்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கு எதிர்பாக்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔4.Sep 2018

மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறினார். தேர்தலை புதிய முறையில் நடத்துவதாக இருந்தால், அதற்கிணங்க அதிகாரிகளின் பொறுப்புகளை வரையறுத்தல் உள்ளிட்ட விடயங்களை தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்