ரவிக்கு அமைச்சுப் பதவி வழங்க, ஐ.தே.க. அரசியல் பீடம் தீர்மானம்

🕔 September 7, 2018

க்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயகவுக்கு மீண்டும், அமைச்சுப் பதவியினை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டள்ளது.

நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடம் கூடிப் பேசிய போது, இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

இங்கு ரவி கருணாநாயக்க பேசும் போது; தனக்கு மீளவும் அமைச்சர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பில்லை என்று, ஜனாதிபதியிடமிருந்து தனக்கு அறியக் கிடைத்ததாகக் கூறினார்.

மேற்படி அரசியல் பீடக் கூட்டத்தில் அதன் உறுப்பினர்களான நவீன் திஸாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், ரஞ்ஜித் மத்தும பண்டார, கபீர் ஹாசிம், ருவன் விஜேவர்த்தன மற்றும் ஹரின் பெனேண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்