மூன்று வருட விசாரணைகளின் பின்னர், கோட்டாவுக்கு எதிராக வழக்கு

🕔 September 9, 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நாளை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

மூன்று வருட விசாரணைகளின் பின்னர், இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது 40 மில்லியன் ரூபா அரச நிதியை பயன்படுத்தி, 2013ஆம் ஆண்டு தன்னுடை தந்தையான டி.ஏ. ராஜபக்ஷவுக்கு நினைவில்லம் அமைத்த குற்றச்சாட்டின்பேரிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள பாரிய ஊழல்களுக்கு எதிரான சிறப்பு நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் கோட்டாபய ராஜபக்ஷ தவிர மேலும் 06 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்னர் எனத் தெரியவருகிறது.

Comments