02 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதியுடைய தங்கக் கடத்தல் முறியறிப்பு
இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த விமானப் பயணி ஒருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதானார்.
இலங்கையைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். இலங்கையைச் சேர்ந்த இவர், இன்று காலை 08.30 மணியளவில் இந்தியாவில் இருந்து விமானம் மூலம் வந்துள்ளார்.
சந்தேகநபர் தனது உள்ளாடை மற்றும் பாதணிகளில் 03 கிலோ 200 கிராம் நிறையுடைய 31 தங்க பிஸ்கட்களை கடத்திய வந்ததாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்தப் பெறுமதி, 02 கோடி 80 லட்சம் ரூபாயாகும்.