ஒரு பாலினச் சேர்க்கைக்கு ஆதரவளிக்கும் தீர்ப்புக்கு, அமைச்சர் மங்கள வரவேற்பு

🕔 September 7, 2018

– மப்றூக் –

ரு பாலுறவில் ஈடுபடுவது குற்றமல்ல என்று, இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமையினை, இலங்கையின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றுள்ளதோடு, இந்தியாவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர் காலத்திலிருந்து 150 வருடங்களுக்கும் மேலாக, இந்திய குற்றவியல் சட்டத்தின்படி, ஒரே பாலினத்தவர்கள் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை அந்த சட்டத்தை இந்திய உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்திருந்தது.

இதனையடுத்து அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

ஓரு பாலினத்தவர்கள் சேர்க்கையில் ஈடுபடுகின்றமை குற்றமல்ல என்று, நேற்றைய தினம் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, நீதிமன்றத்துக்கு வெளியில் திரண்டிருந்த ஓரு பாலினச் சேர்க்கையாளர்கள் – ஒருவரையொருவர் கட்டித் தழுவி கோஷமெழுப்பி, தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments