Back to homepage

பிரதான செய்திகள்

நீதிமன்றில் ஆஜராகுமாறு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 59 பேருக்கு அழைப்பாணை

நீதிமன்றில் ஆஜராகுமாறு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 59 பேருக்கு அழைப்பாணை 0

🕔3.Jan 2018

–  மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 59 மாணவர்களை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05ஆம் திகதி) நீதிமன்றில் ஆஜராகுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவினையும் மீறி, பல்கலைக்கழக நிருவாகக் கட்டத்தினுள் மறியல் போராட்டம் நடத்தியவர்களுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டத்திற்குள்  பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட

மேலும்...
பழைய பல்லவி பாடும் கட்சிகள் குறித்து, விழிப்பாக இருக்க வேண்டும்: றிசாட் பதியுதீன்

பழைய பல்லவி பாடும் கட்சிகள் குறித்து, விழிப்பாக இருக்க வேண்டும்: றிசாட் பதியுதீன் 0

🕔3.Jan 2018

  தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மக்களை ஏமாற்றி பழைய பல்லவியை பாடி ஏமாற்றும் அரசியல் கட்சிகள் குறித்து, வாக்காளர்கள் விழிப்பாக இருக்கவேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். யாழ் மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளரை

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம், கால வரையறையின்றி மூடப்பட்டது: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம், கால வரையறையின்றி மூடப்பட்டது: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔3.Jan 2018

– மப்றூக் –  தென்கிழக்குப் பல்;கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை, கால வரையறையின்றி மூடியுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.பல்கலைக்கழக பீடாதிபதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர், பொறியியல் பீடத்தை கால வரையறையின்றி மூடுவதற்கான முடிவினை நேற்று தாம் எடுத்ததாகவும் உபவேந்தர் கூறினார்.இதனையடுத்து, பொறியியல் பீட மாணவர்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்தினை தடை செய்யப்பட்ட பகுதியாக பல்கலைக்கழக நிருவாகம்

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலை காணிக் கொள்வனவுக்காக வசூலிக்கப்பட்ட நிதியில் மோசடி: அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை வைத்தியசாலை காணிக் கொள்வனவுக்காக வசூலிக்கப்பட்ட நிதியில் மோசடி: அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு 0

🕔3.Jan 2018

– றிசாத் ஏ காதர் –அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை நுழைவாயிலை விஸ்தீரணப்படுத்தும் பொருட்டு, காணித்துண்டினை கொள்வனவு செய்வதற்காக வசூலிக்கப்பட்ட பணத்தில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்றும், அந்தப் பணத்தில் மோசடி இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகம் உள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மு.காங்கிரஸ் முன்னாள் உறுப்பினரும், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளருமான ஐ.எல். நசீர் தெரிவித்தார்.அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
பிச்சைக்காரர்களுக்கு, தொழில் வழங்க அரசாங்கம் தீர்மானம்; நாளொன்று 1500 ரூபாய் உழைக்கவும் வாய்ப்பு

பிச்சைக்காரர்களுக்கு, தொழில் வழங்க அரசாங்கம் தீர்மானம்; நாளொன்று 1500 ரூபாய் உழைக்கவும் வாய்ப்பு 0

🕔3.Jan 2018

அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி, கொழும்பில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு, வேறிடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக மெகாபொலிஸ் மற்றும் மேல்மாாகண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 1500 ரூபாய் வீதம் வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் வகையில், காணிச் சீர்திருத்த அதிகார சபையினால் இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது. இம்மாதம்

மேலும்...
இலங்கையில் 7500 ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளனர்: டொக்டர் சிசிர லியனகே தகவல்

இலங்கையில் 7500 ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளனர்: டொக்டர் சிசிர லியனகே தகவல் 0

🕔3.Jan 2018

இலங்கையில் எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரு தொகுதியினரில், ஆண் ஓரின சேர்க்கையாளர்களே அதிகம் உள்ளனர் என்று, தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்ட பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். அதேவேளை, இலங்கையில் சுமார் 7500 ஓரின சேர்க்கையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் 12 லட்சம் பேரின்

மேலும்...
எனது படங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பில்லை; ஆனால், பொறுப்புமில்லை: தேர்தல் ஆணையாளருக்கு, மஹிந்த ராஜபக்ஷ கடிதம்

எனது படங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பில்லை; ஆனால், பொறுப்புமில்லை: தேர்தல் ஆணையாளருக்கு, மஹிந்த ராஜபக்ஷ கடிதம் 0

🕔2.Jan 2018

தேர்தல் சட்டங்களை மீறி, சில கட்சிகளும் குழுக்களும் தனது படங்களைப் பயன்படுத்துவதற்கு, தான் ஒருபோதும் பொறுப்பில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுதியுள்ள கடிதமொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரத்துக்காக அநேகமான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்

மேலும்...
பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய அரசியல் வெற்றிக்காக உழைத்த அன்வர்டீன், அமைச்சர் றிசாத்துடன் கைகோர்த்தார்

பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய அரசியல் வெற்றிக்காக உழைத்த அன்வர்டீன், அமைச்சர் றிசாத்துடன் கைகோர்த்தார் 0

🕔2.Jan 2018

– அஹமட் – பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய அரசியல் வெற்றிக்காக உழைத்தவரும், முஸ்லிம் காங்கிரசின் நிந்தவூர் பிரதேச பிரமுகருமான ஏ.எல். அன்வர்டீன், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்று திங்கட்கிழமை இணைந்து கொண்டார் எனத் தெரியவருகிறது. அம்பாறை ‘மொன்டி’ ஹோட்டலில், நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்,

மேலும்...
யாருக்கும் முட்டுக் கொடுக்க மாட்டோம்: சாய்ந்தமருது சுயேட்சை வேட்பாளர் அஸீம் உறுதி

யாருக்கும் முட்டுக் கொடுக்க மாட்டோம்: சாய்ந்தமருது சுயேட்சை வேட்பாளர் அஸீம் உறுதி 0

🕔2.Jan 2018

– எம்.வை. அமீர்- சாய்ந்தமருது மக்களின் மூன்று தசாப்தகால கோரிக்கையான தனி உள்ளுராட்சி சபையினை மேலும் வலியுறுத்துவதற்கான சர்வஜன வாக்கெடுப்பாகவே, நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை தாம் பார்ப்பதாக, கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், தோடம்பழச் சின்ன சுயேட்சைக் குழுவில் சாய்ந்தமருது 21 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் தொழிலதிபர் ஏ.ஆர்.எம்.  அஸீம் தெரிவித்தார். குறித்த 21 ஆம் வட்டாரத்தில் சுயேட்சைக் குழுவுக்கான தேர்தல் அலுவலகம்

மேலும்...
அக்கரைப்பற்றுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக, வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம்:  றிசாட் தெரிவிப்பு

அக்கரைப்பற்றுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக, வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம்: றிசாட் தெரிவிப்பு 0

🕔2.Jan 2018

அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் எந்தவோர் ரகசிய உடன்பாடும் கிடையாது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறை பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக தேசிய காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைக்கான

மேலும்...
மு.காங்கிரஸ் உசார் நிலையடைந்துள்ளது: ஹக்கீம் பெருமிதம்

மு.காங்கிரஸ் உசார் நிலையடைந்துள்ளது: ஹக்கீம் பெருமிதம் 0

🕔2.Jan 2018

உள்ளூராட்சி சபைகளுக்கான எதிர்வரும்  தேர்தலானது, ஆட்சியில் இருக்கின்றவர்களின் செல்வாக்கை உரசிப்பார்க்கின்ற ஒரு முக்கியமான உரைகல்லாக அமையப்போகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.குருணாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டம், அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த, தீய சக்திகள் முயற்சி: உப வேந்தர் குற்றச்சாட்டு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த, தீய சக்திகள் முயற்சி: உப வேந்தர் குற்றச்சாட்டு 0

🕔2.Jan 2018

– எம்.வை. அமீர் – மூவின மக்களின் சமாதான கேந்திர நிலையமாக திகழும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி, பல்கலைக்கழகத்தை சீர் குலைப்பதற்கு சில தீய சத்திகள் முயற்சிக்கின்றன என்றும்  சட்டத்தை யாரும் கையில் எடுத்து செயற்பட முடியாது என்றும் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். 2018ம் ஆண்டுடின் முதல் நாள் வேலைகளை ஆரம்பிக்கும்

மேலும்...
வங்கிக்கு வைப்பிலிட கொண்டு சென்ற பணம்; வழி மறித்துக் கொள்ளை

வங்கிக்கு வைப்பிலிட கொண்டு சென்ற பணம்; வழி மறித்துக் கொள்ளை 0

🕔2.Jan 2018

– க. கிஷாந்தன் – தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிடுவதற்காக லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 01 கோடியே 45 லட்சம் ரூபா பணம், இன்று செவ்வாய்கிழமைகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா நகரிலுள்ள சிகரெட் விற்பனை முகவர் நிறுவனத்தில் இருந்து, லொறியில் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. இது குறித்து

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும்

முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும் 0

🕔2.Jan 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘திருவிழா’ என்று உவமிக்குமளவுக்கு தேர்தல் காலம் இன்னும் களைகட்டவில்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் நாளெடுக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்துக்கும், தேர்தல் நாளுக்குமிடையில் 50 நாட்கள் இடைவெளி இருந்தமைதான் இதற்குக் காரணமாகும். இன்னும் இரண்டு வாரங்கள் கழியும் போதுதான், தேர்தல் காலம் களைகட்டத் தொடங்கும். ஆனாலும், திருவிழா அளவுக்கு தேர்தல்

மேலும்...
எதிர்க்கட்சியினர் மீது மட்டும்தான், தேர்தல் சட்டம் பாய்கிறது: நாமல் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சியினர் மீது மட்டும்தான், தேர்தல் சட்டம் பாய்கிறது: நாமல் குற்றச்சாட்டு 0

🕔2.Jan 2018

அரசாங்கத்துக்கு எதிரான கட்சிக்காரர்கள் மீது மட்டும்தான், பொலிஸாரும் தேர்தல்கள் ஆணைக்குழுவினரும் தேர்தல் சட்டத்தைப் பிரயோகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். தங்கல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசாங்க பிரதிநிதிகள் வெளிப்படையாக தேர்தல் சட்டங்களை மீதுவதாகவும், அதன் போது சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவர்களின் கண்கள் குருடாகிப்போய்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்