பிச்சைக்காரர்களுக்கு, தொழில் வழங்க அரசாங்கம் தீர்மானம்; நாளொன்று 1500 ரூபாய் உழைக்கவும் வாய்ப்பு

🕔 January 3, 2018

ரசாங்கத்தின் தீர்மானத்தின் படி, கொழும்பில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு, வேறிடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக மெகாபொலிஸ் மற்றும் மேல்மாாகண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு 1500 ரூபாய் வீதம் வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் வகையில், காணிச் சீர்திருத்த அதிகார சபையினால் இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.

இம்மாதம் 01ஆம் திகதியிலிருந்து கொழும்பில் பிச்சையெடுப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில், அவர்களுக்கு நலன்புரி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பிலிருந்து சுமார் 600 பிச்சைக்காரர்கனை பொலிஸாரைக் கொண்டு வெளியேற்றியதாக, மெகாபொலிஸ் மற்றும் மேல்மாாகண அபிவிருத்தி அமைச்சின் திட்டப் பணிப்பாளர் ரஞ்ஜித் மீகாஸ்வத்த தெரிவித்தார்.

மேலும், இவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக ரிதிகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையத்துக்கு, இவர்கள் கட்டம் கட்டமாகக் கொண்டு செல்லப்படுவார்கள் எனவும் மீகாஸ்வத்த கூறினார்.

ரிதிகம புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்கனவே 480 பேரை தங்க வைப்பதற்கான வசதிகள் உள்ளதாகவும், புதியவர்களுக்காக அங்கு 80 கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மேற்படி பிச்சைக்காரர்களில் தொழில் செய்ய முடியாமல் அங்கயீமுற்றுள்ளவர்கள், வேறுபடுத்தப்பட்டு பராமரிக்கப்படுவார்கள் எனவும் திட்டப்பணிப்பாளர் ரஞ்ஜித் மீகாஸ்வத்த தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்