தலைப்புச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்த அதிகாரிகளுக்கான இழப்பீடுகள் தொடர்பில் அறிவிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் நடந்த மோதல்களின்போது உயிரிழந்த சிறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 500,000 என்பது, ஆரம்ப இழப்பீட்டுத் தொகை மட்டுமே என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தொகை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் மொத்த இழப்பீட்டுத் தொகையை ரூ. 02 மில்லியனுக்கும் மேலாக உயர்த்துவது குறித்து திணைக்களம் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

மேலும், உயிரிழந்த அதிகாரிகளுக்கான அனைத்து இறுதிச் சடங்கு செலவுகளையும் சிறைச்சாலைகள் திணைக்களமே ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தின்போது காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இழப்பீடு குறித்தும் திணைக்களம் ஆய்வு செய்து வருகிறது.

காயமடைந்த 07 சிறை அதிகாரிகள், தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூவர் – கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆணையாளர் கஜநாயக்க தெரிவித்தார்..