
பொத்துவிலில் இன்று (12) 38.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்று பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.
இந்த அளவீடு – பொத்துவில் வானிலை நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
இன்றைய இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை பொலன்னறுவையில் 37.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.
மதிய வேளையில் அதன் பிராந்திய வானிலை கண்காணிப்பு நிலையங்களால் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலைகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் அமைந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



