தலைப்புச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றும் மோதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 07 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறையில் இன்று (06) காலை மீண்டும் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 ஆக உயர்ந்துள்ளது,

மேலும் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுள்ளனர். 

அதன்படி, பெரும்பாலும் பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட சுமார் 50 பேர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

படுகாயமடைந்தவர்களை கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை (06) நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டது.  

நேற்றைய சம்பவங்களைத் தொடர்ந்து இன்று காலைக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், சிறையில் மீண்டும் கலவரம் தலைதூக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று பிற்பகல் சுமார் 1.00 மணியளவில் நீர்கொழும்பு சிறையில், கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே முதலில் மோதல் வெடித்தது. 

விசாரணைக் கைதிகள் குழுவுக்கும், தண்டனைக் கைதிகள் குழுவுக்ககும் இடையே இந்த மோதல் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்ததுள்ளனர். 

நேற்றைய மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்தனர், மேலும் 38 பேர் காயமடைந்து தற்போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.