
லங்கா உப்பு கம்பனியின் தற்போதைய பொது முகாமையாளரை,இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.
ரன்னாயக்க முதியன்செலகே பிரசன்ன என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், நடைபெற்று வரும் ஒரு விசாரணை தொடர்பில் இன்று (19)காலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் – நிறுவனத்திற்கு மூட்டைகள் வாங்குவதற்கான நடைமுறையில், முறையான கொள்முதல் நடைமுறைகளை மீறியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேடான நடைமுறையினால், அரசுக்கு ஏறக்குறைய ரூ. 14.3 மில்லியன் நிதி இழப்பை ஏற்படுத்தியதோடு, விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற சாதகத்தையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


